பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

?ዞ ? i 11 s 11

உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்

பெண் கேட்பதில் மனிதர்கள் வசந்தகாலமாக (ஏப்ரலாக) இருக் கின்றனர். திருமணத்தில் பனிக்காலமாக (டிசம்பராக) இருக்கின்றனர். அ ஷேக்ஸ்பியர் நாவு ஒன்றுள்ள மனிதன், அதைக்கொண்டு ஒரு பெண்ணை அடைய முடியாவிட்டால், அவன் மனிதனே அல்லன். அ ஷேக்ஸ்பியர் பெருந்தீனி i H ★ உண்பதைத் தவிர வேறு இன்பமேயில்லாதவர்கள் தாங்கள் உயிர் வாழ்வதன் காரணம், அது ஒன்றுதான் என்று கூறலாம். க ஜூவினல் சில மனிதர்கள் விருந்துண்ணவே பிறந்தவர்கள். போராடு வதற்காக அன்று. போர்க்களத்திலே கூட ஊக்கமில்லாத அவர்கள் உள்ளங்களில் சாப்பாட்டைப்பற்றியே நினை விருக்கும். சமையலறைதான் அவர்களுடைய ஆலயம் சமையற்காரனே அவர்களுடைய பூசாரி, உணவுண்ணும் மேசையே அவர்கள் பலி பீடம் வயிறே அவர்களுடைய கடவுள். பக் பெருந்தீனிதான் நம் குறைபாடுகளுக்கெல்லாம் காரணம் நம் பிணிகளுக்கெல்லாம் அடிப்படை அ பர்ட்டன் வயிற்றுக்கு அடிமையாயுள்ளவன் கடவுளைத் தொழுதல் அரிது. ைஸா அதி பெருமை ★ பெருமை. வலிமையாயிருப்பதில் இல்லை. வலிமையைச் சரியாகப் பயன்படுத்துவதில் இருக்கின்றது.