பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/282

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

υ, στιρωήνου/ταθ' :ί: 297 நெருநல் உளன்.ஒருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்துஇவ் வுலகு. க. திருவள்ளுவர் மரியாதைகள் மரியாதை எல்லா மனிதர்களின் அன்பையும் கவரக்கூடிய ஆற்றலுள்ளது: அதில் சொற்பமாயில்லாமல், அதிகமா யிருப்பதே நல்லது. அ பிஷப் ஹார்ன் மரியாதையாகப் பேசுவதும் நடப்பதும் செலவில்லாத செல்வங்கள். அ. செர்வாண்டிஸ் உன்னை ஒருவர் வணங்கினால், அவனைவிட அதிகமாகப் பணிவோடு நீயும் வணங்கு அல்லது அதே அளவாவது திருப்பிச் செய். ஏனெனில், ஆண்டவன் எல்லா விஷயங்களையும் கவனிக்கிறான். கி. குர்ஆன் சிறு மரியாதைகள் வாழ்க்கையை இனிமையாக்குகின்றன. பெரிய மரியாதைகள் அதை மிகவும் சிறப்படையச் செய்கின்றன. அ போவி மரியாதை காட்டுதல் முதன்மையாக முக்கியமுள்ள ஒரு கலை. உடலின் அழகும் எழிலும் பார்த்தவுடன எப்படி ஒருவரைக் கவர்ந்து, பிறகு அந்தரங்கத் தோழமை கொள்ள உதவு கின்றனவோ, அதே போன்றது மரியாதையும். மாண்டெயின் நம்முடைய நடத்தை நம்மினும் உயர்ந்தோர் தாழ்ந்தோர். நமக்குச் சமமானவர் ஆகிய மூன்று வகையான மக்களிடத்திலும் பொருத்தமாக இருக்கும்படி அமையவேண்டும் இது நற் பயிற்சியில் முக்கியமான ஒரு விஷயம். - ஸ்விஃப்ட் நற்பயிற்சியில்லாத அறிஞன் தற்பெருமைக்காரனாக இருப்பான். தத்துவ ஞானி குறை சொல்லிக்கொண்டேயிருப்பான். போர் வீரன் வெறும் முரடனாயிருப்பான். அது இல்லாத ஒல்