பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/287

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302

உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்

மனிதனும் மனிதர்களும் ጳ படைப்பில் மனிதனே முதன்மையான அதிசயம்; அவனுடைய இயல்பைப்பற்றி ஆராய்தல் உலகில் உன்னத ஆராய்ச்சியாகும். அ. கிளாட்ஸ்டன் பாதி மண், பாதி தெய்வம், மனிதன் மூழ்கவும் முடியாது. பறக்கவும் முடியாது. அ பைரன் சமூகத்தால் சீர்திருத்தப்பட்ட மனிதன் எல்லா விலங்குகளிலும் சிறந்தவன். அவன் சட்டமும் நீதியும் இல்லாமல் வாழ்ந்தால், அவனைப்போல் பயங்கரமானது வேறெதுவும் கிடையாது. அ அரிஸ்டாட்டில் மனிதன் தானாக நிமிர்ந்து நிற்கவேண்டும். மற்றவர்கள் அவனை அப்படி நிறுத்தி வைக்கக்கூடாது. அ மார்க்க அரேலியஸ் உன்னதமான மனிதனுடைய வாழ்க்கைமுறை மூன்று பிரிவா யிருக்கும்; அவன் ஒழுக்கத்தோடு இருப்பதால். கவலை யற்றிருப்பான்; அவன் அறிவாளியாயிருப்பதால், அவனுக்குக் குழப்பங்கள் இருக்கமாட்டா அவன் தைரியமாயிருப்பதால், அச்சம் அண்டாது. அ. கன்ஃபூவுயெஸ் ஒருவன் எப்பொழுதும் வீரனாயிருக்க முடியாது. ஆனால், ஒருவன் எப்பொழுதும் மனிதனாய் இருக்க முடியும். க. கதே நான் என்னை ஒரு மனிதனாக்கிக்கொள்ளத் தீர்மானிக்கிறேன். நான் அதில் வெற்றி பெற்றால், மற்ற எல்லாவற்றிலும் வெற்றி பெற்றுவிடுவேன். அ. கார்ஃபீல்டு நம்பிக்கை இழந்து, கெளரவமும் போய்விட்டால், மனிதன் பிணந்தான். _ விட்டியர் சமயம் அரசியல் கல்வி முறை ஆகிய ஒவ்வொன்றுக்கும் ஒரு சோதனை உண்டு. அது எத்தகைய மனிதனை உருவாக்குகிறது? - . . on to அ ஏமியல் ஒரே மனிதனைக் கடவுள் மனிதர்களாகப் பிரித்துள்ளார். அவர்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்துகொள்ள வேண்டும் என்பது அவர் நோக்கம். அ லெனிகா