பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப. ராமஸ்வாமி

35


ப. ராமஸ்வாமி 卡 35 மற்ற மனிதர்களின் கண்களே நம்மைக் கெடுக்கும் கண்கள். என்னைத்தவிர மற்ற யாவரும் குருடர்களாயிருந்தால், எனக்கு நேர்த்தியான உடைகளோ, பெரிய வீடுகளோ, உயர்ந்த நாற்காலிகள் முதலியவைகளோ தேவையில்லை. அ ஃபிராங்க்லின் ஓர் ஆசிரியரின் நூலில் என் கருத்துப்படியே எழுதியுள்ள பகுதியை நான் பாராட்டிப் புகழ்கிறேன். அவர் என் கருத்துக்கு மாறுபடும் இடங்களில் அவர் கூற்றுகள் தவறானவை என்று நான் முடிவு கட்டுகிறேன். ைஸ்விஃப்ட் சொந்த அபிப்பிராயம் எதுவுமின்றி, பிறருடைய அபிப் பிராயத்தையும் விருப்பத்தையுமே சார்ந்திருப்பவனை அடிமையென்று கருதலாம். க. கிளாப்ஸ்டாக் காலியாயுள்ள தோல் பைகளைக் காற்று புடைக்கச் செய்யும்: மூடர்களை அபிப்பிராயம் புடைக்கச் செய்யும். சாக்ரடீஸ் தனி மனிதரின் அபிப்பிராயம் பலவீனமானது. ஆனால், பொது மக்களின் அபிப்பிராயம் அநேகமாகச் சர்வ வல்லமை உள்ளது. ைபீச்சர் ஒர் அபிப்பிராயம் உண்மைக்குப் பொருத்தமாயில்லா விட்டாலும். அது உன்னுடையது என்பதற்காக அதைப் பிடிவாதமாகப் பற்றிக்கொண்டிருந்தால், உண்மையைவிட நீயே மேலானவன் என்று கருதுவதாகும். அ வென்னிங் இரண்டு உரோமங்களோ, இரண்டு தானியங்களோ ஒன்று போல் இருந்ததில்லை; இதுபோல, உலகத்தில் ஒரே மாதிரியான இரண்டு அபிப்பிராயங்கள் என்றுமே இருந்த தில்லை. உலகம் அனைத்திற்கும் பொதுவான இயல்பு பல. வகைகளாகப் பிரிந்திருத்தலாகும். ைமாண்டெயின் மனிதர்கள் நம்மை நிந்திக்கும் பொழுது, நாம் நம்மையே சந்தேகித்துக்கொள்ள வேண்டும்; அவர்கள் நம்மைப் புகழும்