பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப. ராமஸ்வாமி

43



அரசாங்கம் நம்மை நாமே ஆண்டுகொள்ளக் கற்பிக்கும் அரசாங்கமே அரசாங்கங்களுள் தலைசிறந்தது. அ கதே அரசாங்கம் என்பது, வெறும் ஆலோசனை கூறுவது மட்டுமன்று அதற்கு அதிகாரம் உண்டு. தன் சட்டங்களை அமல் நடத்தும் ஆற்றலும் உண்டு. அ வாஷிங்டன் நல்ல சட்டங்களும் நல்ல ஆயுதங்களுமே எல்லா அரசாங் கங்களுக்கும் முக்கியமான அடிப்படை அ மாக்கியவில்லி அரசாங்கத்தில் அங்கம் வகிக்க மறுக்கும் அறிவாளர் அனுபவிக்கும் தண்டனை, தீய மனிதர்களின் ஆட்சியின்கீழ் வாழ்வதாகும். ைபிளேட்டோ அரசாங்கம் அவசியமான ஒரு தீமை, அது நடைவண்டிகள். ஊன்றுகோல்களைப் போன்றது. நமக்கு அது அவசியம் என்பது நாம் இன்னும் எவ்வளவு குழந்தைப்பருவத்திலிருக் கிறோம் என்பதைக் காட்டுகின்றது. அதிகமாக ஆட்சி புரிதல் மக்களுடைய சக்தியையும் தாங்களே தங்களுக்கு உதவிக் கொள்வதையும் மாய்த்துவிடும். அ வெண்டெல்ஃபிள்ப்ஸ் ஆண்டு அடக்குதல் குறையக் குறைய நமக்கு நல்லது. சட்டங்கள் குறைவாயிருப்பதும் அளிக்கப்படும் அதிகாரம் குறைந்திருப்பதும் நலம், சாதாரணமான அரசாங்கத்தால் விளையும் தீமைக்கு மாற்று. தனிப்பட்டவரின் ஒழுக்கமும், தனி மனிதரின் வளர்ச்சியும். அ எமர்பைன் நன்றாக ஆளப்பெறும் மக்கள். வேறு சுதந்தரம் எதையும் தேடக்கூடாது. ஏனெனில், நல்ல அரசாங்கத்தைப்பார்க்கினும் அதிகமான சுதந்தரம் வேறு இருக்க முடியாது. அ எலர் வால்டர் ராலே