பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102 ,

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா



3. பெரும் பெரும் சூதாட்டம், அடிமை வியாபாரம், பொதுப் பணத்தைக் கையாடல், தனக்காக எதையும் செய்யத் தயாராக இருந்த தறுதலைப் பண்புகள், எல்லாம் சமுதாய வளர்ச்சியின் ஆணிவேரை அறுத்துப் புழுதி மேடாக்கின.

4. ஆடம்பரமான வாழ்க்கை, சக்திக்கு மீறிய கேளிக்கைகள், திறமையை அழிக்கும் தீயபழக்கங்களில் மிதந்த மக்களை, நோய்கள் புகுந்து அழித்தன. நலங்குன்றி சமுதாயம் நாளடைவில் நாலும் இழந்து, அருகிப் போனது.

ஆக, சரித்திரம் படைத்த ஒரு சாம்ராஜ்யம் சரிந்து அழிந்ததற்குக் காரணம் சக்தியில்லாத மக்களாய், சமுதாயமே வலிமை இழந்து போனதால் தான் என்பதையே, நாகரிக உலகத்திற்கு இந்த ரோம சரித்திரம் சான்றாகக் காட்டிப் பாடம் கற்பித்து நிற்கிறது.

டியூடானிக் கூட்டமும் கொள்கையும்

காட்டு மிராண்டித்தனம் நிறைந்த டியூடானிக் கூட்டம், வலிமையான உடலையும், புலியான வீரத்தையும் கொண்டிருந்ததால், எளிதாக ரோமானியர்களை வீழ்த்தி ஆட்சியைப் பிடித்தது.

இந்தக் கூட்டத்தினர் இத்தாலி, பிரிட்டன், ஸ்பெயின், வடஆப்பிரிக்கா, கால் போன்ற நாடுகளையும் வென்று, அடிமைப்படுத்தி, ஒரு புதிய சரித்திரத்தையே உண்டு பண்ணிவிட்டனர்.

அவர்கள் ஆட்சியில் கலைகள், கலாசாரம் களைகளைப் போல களைந்தெறியப்பட்டன. சமுதாய புனரமைப்புப் பணிகள் எல்லாம் ஒதுக்கி தள்ளப்பட்டன. கட்டிடங்கள், பாலங்கள் இடிந்துபோகும் அளவுக்குப் பராமரிப்புகளை இழந்தன. அரசுமுறை என்பது முற்றிலும் அகற்றப்பட்டது. வென்ற டியூடனிக் கூட்டத்தின் தலைவன், ஆட்டியூடானிக் கூட்டமும் கொள்கையும்சி