பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா



t! அமையவில்லை. மாறாக பேரிடியாய் தாக்கியது, தகர்த்து வீழ்த்தியது. - அப்படி அழிக்க வந்த இரண்டு அம்சங்கள்தாம் அங்கே ஆரவாரித்துக்கொண்டு எழுந்தன. புகுந்தன. எல்லாமே தகர்ந்தன. இவற்றில் ஒன்று கிறித்தவமதம், மற்றொன்று அறிவு தந்த அறிவின்மை. ஒழுக்கமற்ற ரோம் பிரஜைகள்; ரோம் கடவுள் மீது பக்தியோ நம்பிக்கையோ வைக்காமல், நீச்சல் குளத்தில் நீராடி மகிழ்வதும். விளையாட்டுக்களை வேடிக்கைப் பார்ப்பதுமாக உடலையும் வாழ்க்கையையும் வீணாக்கினார்கள். வாழ்க்கையும் வீணாகிவிட்டது. என்றால் தேசம் வீணாகி விட்டது என்று தானே அர்த்தம். அதுதான் அங்கே நடந்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் உள்ளுக்குள்ளே ஓர் ஆன்மப் புரட்சி எழுந்தது. அதாவது உலக இன்பங்களைத் துறந்திடும் உணர்வையும், ஆண்டவனை வேண்டுகிற நினைவையும் பலர் ஏற்றுக்கொண்டார்கள், பின்பற்றிக் கொண்டார்கள். அதாவது, இந்த உலகை விட்டு விட்டுப் போய் அடுத்த உலகில் வாழ்வதற்காக, தங்கள் வாழ்வைத் தயார் செய்து கொள்ள வேண்டும் என்ற ஒரு (புதிய) மதக் கொள்கைக்குள்ளே வீழ்ந்தார்கள். அதனால் உடல்பற்றிய, உடலுக்குரிய பயிற்சி செயல்கள் பற்றிய கொள்கையை தூற்றினார்கள் மாற்றினார்கள். உடலை பலத்தோடும் வலிமையோடும் வைத்துக் கொள்ளும் கொள்கையை வெறுத்தார்கள். அதை முட்டாள் தனம் என்று பழித்தார்கள். உடலை சைத்தான் என்றும் மனதைக் கடவுள் என்றும் உரைத்தார்கள்.