பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக நாடுகளில் உடற்கல்வி 1 O5 a oil-om உடலை வாட்டி வதைக்க வேண்டும். மனதைப் போற்றி உயர்த்த வேண்டும். உடல் வேறு மனம் வேறு என்று வாதிட்டு, உடலை வதைக் கும் முறைகளை மேற் கொண்டார்கள். அவர்கள் எப்படி எப்படியெல்லாம் உடலை வதைத்துக் கொண்டார்கள். என்று படிக்கும் போது, அவர்கள் மேல் கோபம் வரவில்லை. மாறாக, பரிதாபமே மேலிடுகிறது. உடல் சைத்தானுக்குரியது, உலக வாழ்க்கையானது தீமை பயப்பது. அதனால், உடலை நன்கு தண்டிக்க வேண்டும் என்றார்கள். அதற்காக உடல் மீது மயிரால் ஆன உடையை அணிந்தார்கள். சூடான நிலக்கரி மீது நடந்தார்கள். முட்கள் மேலே அமர்ந்தார்கள். கால்களில் இரும்புச் சங்கிலியால் விலங்கிட்டுக் கொண்டு சென்றார்கள். எதற்காக? வெளிப்புற உலகில் உலவும் உடலை, தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருகிறோம் என்ற எண்ணத்தில், தங்கள் தேகங்களைத் தாக்கித் தளரச் செய்தார்கள். இதுபோன்ற காரியங்கள் தேகத்திற்கு தீமை ஊட்டின தேகங்கள் தளர்ந்தன. நரம் புத் தளர்ச்சியால் மக்கள் நலிந்தார்கள். அவர்கள் நோயாளிகளாக நொந்து போனார்கள். இத்தகைய கொள்கையுடன் கிறித்தவ மதம் வளர்ந்தது. ஆங்காங்கே கிறித்தவ மடங்கள் அமைக்கப்பட்டன. அதற்குள்ளே போய் அமர்ந்து கொண்டு, மக்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டார்கள்; அவர்கள் ஆதிக்கமே சமுதாயத்தில் மேலோங்கி வந்தது. இந்த மடங்களுக்குள்ளே (Monasteris) பயிற்றுவிக்கும் பள்ளிகள் யாவும் இணைக்கப்பட்டன, இவர்கள் கட்டுப்