பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக நாடுகளில் உடற்கல்வி 1Ο7 உடற் பயிற்சி செய்யும் அரங்கத்தை தசைகளை வளர்க்கின்ற தொழிற் சாலைகள் (Muscle Factory) என்கிறார்கள். - அறிவுள்ளவர்களே இப்படிப் பேசினால், உலகம் என்ன ஆகும்? உடற்கல்வி இன்றைய நிலையில் வளர்ச்சிபெறாமல் போனது, இத்தகைய அறிவாளிகளிடையே ஏற்பட்டக் குழப்பத்தால் தான். மக்கள் மனதிலே உள்ள ஐயங்களைப் போக்கி, உடற் கல்வியின் உண்மையான கொள்கைகளை நடைமுறைகளை உலகுக்கு உணர்த்தினால் தான். உடற்கல்வி உயரும் என்று தான் இந்த நிலைமை இருந்து வருகிறது. இருண்ட காலத்தில் இன்னொரு கோலம் உடற் கல்வியை வீழ்த்த இன்னொரு பூதம் அந்த இருண்ட காலத்தில் கிளம்பியது. அதற்கு நிலப் பிரபு ஆட்சி (p6op (Feudalism) 6T6örp Gluuit. ஒரு விளக்கம், சார்லிமேகன் என்ற திறமைமிக்க ஒரு (கி.பி.8ம் நூற்றாண்டு) மன்னரின் பேராட்சிக்குப் பிறகு, நாட்டினை ஒற்றுமையாய் வைத்து அரசாளுகின்ற தகுதி படைத்த அரசு எதுவும் ஏற்படாமல் போனது, பெரும் குறையாகவே இருந்தது. பல நூற்றாண்டுகள் இப்படியே பல ஆட்சிகள் வந்து சிறப்பற்றுப் போயின. அதனால், நாட்டில் ஒரு புதிய சமுதாய அமைப்பே ஏற்பட்டு விட்டது. - கி.பி. 9ம் நூற்றாண்டிலிருந்து 14ம் நூற்றாண்டு வரை இப்படியே நிலைமாறிப்போன வாழ்க்கைச் சூழ் நிலையில் தான். இந்த நிலப்பிரபு ஆட்சி முறை தொடங்கியது.