பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 O8 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா r=------ அந்த நில ஆட்சி முறையால், அரசு முறையே மாறியது. நீதி முறையும் நிலை தளர்ந்தது. நில உரிமைகள் முரண்பாடு கொண்டன. போருக்கு ஆள் திரட்டப்பட்டது. அத்துடன் தொழில் முறையாலும் சிக்கல் ஏற்பட்டு, சமுதாய வாழ்க்கையே தடம் புரண்டு போயின. ஏன் ஏற்பட்டது? இந்த நிலப்பிரபு ஆட்சி முறை வருவதற்கு, சமுதாயச் சூழ் நிலையின் தடுமாற்றங்களே காரணம் என்று முன்னர் கூறினோமல்லவா! அத்தகைய காரணங்களை இனி காண்போம். 1. நாட்டில் வலிமையான மத்திய அரசு ஒன்று ஏற்படாமல் போன காரணத்தால், அரசிடமிருந்து மக்களுக்குப் பாதுகாப்பு கிடைக்காமற் போயிற்று. 2. அதனால் பிரபுக்களும் பணக்காரர்களும் தங்களுக்குப் பாதுகாப்பு வேண்டும் என்பதற்காகத் தனித்தனியே, பெரிய மாளிகைகளையும், கோட்டை கொத்தளங்களையும் கட்டிக் கொண்டனர். - 3. பிரபுக்களும் (Lord) நிலச் சொந்தக் காரர்களான மிராசுதார்களும் தங்களுடைய நிலங்களை வேளாண்மை செய்து பயிரிட, கூலி ஆட்களை அமர்த்தி கொண்டனர். அவர்களுக்கு செர் (Serr) என்று பெயர். இவர்களும் தங்களுக்குக் கீழ் வேலை செய்ய, ஆட்களை அமர்த்தினார்கள் அவர்களுக்கு வசல் (vasal) என்று பெயர். இப்படியாக ஒருவருக் கொருவரை தொழில் செய்யும் அடிமைத் தனத்தில், முறையாக வளர்க்கப்பட்ட அமைப்பு தான் நிலப்பிரபு ஆட்சிமுறை என்ற பெயரைப் பெற்றது.