பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக நாடுகளில் உடற்கல்வி 1 O9 === ཟླ། ཟས་བཟང་བ་བཟས། ། நிலப்பிரபுக்கள் எல்லோரும் அரண்களும், அகழிகளும் சூழ்ந்திருக்குமாறு பெரிய கோட்டைகளைக் கட்டி, தங்களைப் பாதுகாத்துக் கொண்டனர். s இந்தப் பிரபுக்களின் குமாரர்களுக்கு, வாழ்க்கையில், இரண்டே இரண்டு வழிகள் தான் வாழ்க்கையை நடத்தும் வழிமுறைகளாக இருந்தன. அவை தான் உடற்கல்வி உயிர் வாழ உதவியதால், அதனை இங்கே அறிந்து கொள்வோம். 1. அவர்கள் மதக் குருக்களாக மாறிட வேண்டும். (Clergy) 2. வீரர்களாக மாறிட வேண்டும். (Knight) அதாவது மதக்குருக்களாக மாற விரும்பும் பிரபுக்களின் மைந்தர்கள் (Sons), மதசம்பந்தமான பாடங்களைப் படித்து, கிறித்தவ ஆலயங்களுடன் தொடர்புகொண்டாக வேண்டும். வீரர்களாக மாற விரும்புகிறவர்கள், பல வீர தீர சாகசச் செயல்களைக் கற்று, மாவீரர்கள் என்னும் பட்டத்தைப் பெற வேண்டும். வீரர்கள் என்னும் வீரத்தையும் புகழையும் பெறுவதற்காக பயிற்சிகளை பெற்றுக் கொண்ட சூழ்நிலையில் தான், உடற்கல்விக் கொஞ்சம் தலைகாட்டி, நாட்டினரிடையே தான் உயிருடனிருக்கும் அசைவை வெளிப்படுத்திக் கொண்டது. பிரபுக்கள் தங்கள் குமாரர்களை, 7 வயது பையனாக இருக்கும்பொழுதே, உடற்பயிற்சியில் ஆர்வமுடன் இருந்து பயிற்சியளிக்கின்ற பிரபுக்களின் அரண்மனைக்கு (குருகுலவாசம் போல) அனுப்பி வைப்பார்கள். அதாவது சிறந்த வீரனாகத் தயாராகி வருவதற்காக. ஆரம்ப நாளில் அந்தப் பையன் (Page) என்று அழைக்கப்படுவான். அவனுக்கு ஒரு ஆசிரியைப்