பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக நாடுகளில் உடற்கல்வி 111 மாவீரர்களும் போட்டிகளும் இப்படிக் கற்றுத் தேர்ந்து விருது பெற்று வந்த பிரபுக்களின் மைந்தர்களான மாவீரர்களுக்கு, வாழ்க்கை முழுவதும் இரண்டு விதமான போட்டி முறைகளே இருந்தன. அதற்குள்ளேதான் அவர்கள் ஆனந்தம் கண்டனர். ஆரவாரப் புகழையும் அடைந்தனர். 1. இரண்டு மாவீரர்கள் தங்கள் திறமைகளைக் காட்டிப் பெருமை பெற சண்டைபோடும் துவந்தயுத்தம். (Dual Fight) நடக்கும். இதற்கு (Jousts) என்று பெயர். ஒவ்வொரு மாவீரனும் குதிரை மீதமர்ந்து கொண்டு ஒருவரை ஒருவர் குதிரையிலிருந்து கீழே தள்ளி வீழ்த்துகிற சண்டை முறைகளைக் கையாளுவர். குதிரையிலிருந்து விழுந்து விடுகிற வீரன் தோற்றவனாகிறான். (Jousts) என்பது தனியாள் சண்டைகளாகும். 2. மாவீரர்கள் பலர் கூடிப் போர் செய்வது போல. சண்டை போடும் போட்டியை (Tournament) என்று அழைத்தனர். மாவீரர்கள் தாங்கள் பெற்ற கடுமையான பயிற்சிகளை, திறன் நுணுக்கங்களை மற்றவர்களுக்குக் காட்டும் காட்சியாக, இந்த சண்டைப் போட்டிகளை போர்கள் போல நடத்திக் காட்டுவார்கள். பங்குபெறுகிற மாவீரர்களை இரண்டு குழுவாக முதலில் பிரிப்பார்கள். அகன்ற இடப்பரப்பில் அவர்களை வரிசையில் நிற்க வைத்து, ஒரு சைகை மூலம் சண்டை போடச் செய்வர்; அவர்கள் எதிர்க்குழுவினரை இடம் மாற்றிச் செய்திட எல்லா வகையான (முரட்டுத்தனம்) போராட்ட முறைகளையும் கையாளுவர்.