பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 - டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

--

கிடையிலே ஓய்வும், உல்லாசமான விளையாட்டுக்களும் இடம்பெற வேண்டும். உடல் நலத்திற்கு மட்டுமின்றி, நாடுகாக்கும் இராணுவ சேவைக்கும் உடல் கல்வி உறுதியானதுதான் என்ற உண்மையை மக்களினம் ஏற்றுக் கொண்டது. போற்றிக் கொண்டது. இத்தகைய கருத்துக்களை சிறந்தோங்கிய சிந்தனை யாளர்கள், உடற்கல்வி பற்றிக் கூறி, உலகை வயப்படுத்தி னார்கள். சிந்தனையாளர்கள் சிலர் செப்பிய கருத்துக்களை இங்கே காண்போம். - /. @oc:Gc /7ó°@77 c /7.:6\wçõc:77(Vittorinada feitra) இவரது காலம் 1378 முதல் 1446 வரை ஆகும். இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர், கோர்ட்ஸ்கூல் என்ற பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர். பள்ளிக் கூடத்தில், முதன் முதலாக உடற்பயிற்சியும் மூளைப் பயிற்சியும் ஒன்றாக இணைய வேண்டும் என்று முயற்சிகளை மேற்கொண்டவர். பள்ளிப் பாடத்திட்டத்தில், தினம் உடற்பயிற்சிகளை முறையாகக் கற்பித்தவர். அதாவது நடனம், குதிரையேற்றம், கத்திச் சண்டை, நீச்சல், மல்யுத்தம், ஓட்டம், தாண்டல், வில் வித்தை, வேட்டையாடுதல், மீன் பிடித்தல் போன்ற வற்றை பாடத்திட்டங்களில் சேர்த்து, சிறப்பாகக் கற்பித்தவர். இவரது கொள்கையாவது; உடற்கல்வியானது உடலை ஒரு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து ஒழுக்கமாக வாழச் செய்கிறது. போர்ப் பணிக்கு உடலைத் தயார் செய்கிறது. ஓய்வையும் உல்லாசமான நேரத்தையும் (Recreation) தந்து, உடலை நன்னிலைக்கு உயர்த்துகிறது. அத்துடன் மற்ற பாடங்களையும் தெளிவாகவும், விரைவாகவும் குழந்தைகளை நன்கு கற்றிட உற்சாகம் ஊட்டி உதவுகிறது.