பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 16 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா மேம்பாடு காண ஒத்துழைக்கின்றன என்பதை தெளிவுபடக் கூறியிருக்கிறார். 4. 4/f3æo6nJ 6768æv (Sir Thomas Elyot) /.490– s 546 இங்கிலாந்து நாட்டினரான இவர், கவர்னர் (Governor) என்ற தனது நூலில், உடற்கல்வியின் கொள்கையை, அதன் உயர்வைப் பற்றி மிக விரிவாகவே எழுதியுள்ளார். விளையாட்டுக்கள் மூலமாக உல்லாசம் தரும் மகிழ்வு உணர்வுகள் (Recreation) விளைகின்றன. உடற்பயிற்சிகள் இளைத்த மனதையும் களைத்த உடலையும் மாற்றி, களிப்படையச் செய்கின்றன. 5. condą GörgMød (Martin Luthar) /483-/546 ஜெர்மானியரான இவர், ஒரு தீவிர மதச்சீர்திருத்தவாதி, புரோட்டஸ்டன்ட் (Protestant) என்று, கிறித்தவ மதத்தில் ஒரு புதிய கிளையை ஏற்படுத்தியவர். இவர் கிறித்தவ மதவெறியராக இருந்தவர்களுக்கு எதிர்ப்புக் குரல் கொடுத்தார். மாற்று வழி அளித்தார். வாழ்க்கைத் துன்பங்களிலிருந்து விடுபட, மதத்தைத் துணையாக்க வேண்டாம் என்று கூறி, அதற்கு உண்மையாக உதவுவது உடற்கல்வியே என்றும் தெளிவுபட விளக்கினார். மனதில் உள்ள குழப்பங்களை, கவலைகளை மாற்றிட: உடலை நீடித்துழைக்கும் ஆற்றலைப் பெற்றிட உடல் நலத்தை உயர்த்திட உடற்கல்வியே உதவுகிறது என்றார். ஓய்வு என்ற பெயரில் தீய பழக்கங்களான சூதாட்டம், குடி போன்றவற்றை மேற்கொண்டவர்களை மாற்றி, உண்மை யான ஓய்வு என்பது உடல் நலம் காக்கும் சுறுசுறுப்பான