பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா கல்வித்துறையில், உன்னதமாக வளர்ச்சிகளை ஜெர்மனியில் உற்பத்தி செய்து தந்தது. புதிய உடற்கல்வியின் தந்தை உடற்கல்வித்துறை ஜெர்மனியில் தொடக்கம் பெறுவதற்குத் துணையாகவும், தூண்டுகோலாகவும் இருந்தவர் ஜோகன் பேஸ்டவ் என்பவர். இவரது காலம் 1713 முதல் 1790 ஆகும். பேஸ்டவ் டென்மார்க் நாட்டில், பிரபுக்களின் குமாரர்கள் படிக்கும் பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார். அந்த மாணவர்கள் வீரமான விளையாட்டுக்களில் பயிற்சிபெற்று வருவதைப் பார்த்தபேஸ்டவ், உடற் கல்வியின் உயர்கொள்கையை அறிந்து வியந்து, தனது தாய் நாடான ஜெர்மனியிலும், இதுபோன்ற கல்வியைத் தொடங்கினால் என்ன என்று சிந்திக்கத் தொடங்கினார். இவருடைய எண்ணங்களுக்கு, பிரான்சின் சிந்தனை வாதியான ஜீன் ஜேக் யூஸ் ரூசோவின் சிந்தனைகள் வலுவூட்டின. கல்வியின் ரகசியம் என்பது உடலை உறுதிப் படுத்தவும், மனதை மேன்மைப்படுத்தவும், ஒருவொருக் கொருவர் உதவுகின்ற மகிழ்ச்சியான பண்பாட்டை வளர்ப்பதும் தான் என்பதைத் தெளிந்து மகிழ்ந்தார். பெரியமனிதருக்கு உரிய கல்விதனைக் குழந்தைகளுக்கு கற்றுத்தராமல். அவர்களுக்கு வேண்டிய இயற்கையான இயக்க விளையாட்டுக்களில் ஈடுபடுத்துங்கள், பெண்களுக்கும் விளையாட்டுகளைப் போதியுங்கள். அவை அவர்களை வீரமுள்ளவர்களாகவும், வலிமையான தாய் மார்களாகவும் மாற்றும். உடற்கல்வியே பொதுக்கல்வியுடன் இணைந்துள்ள ஒப்பற்றக் கல்வி என்ற ரூசோவின்