பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 - டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா இவர் 1774ல் தொடங்கிய பிலோந்திரோபினம் என்ற பள்ளி, 1793ம் ஆண்டு மூடப்பட்டு விட்டது. ஆனால் பேஸ்டவ் ஏற்றி வைத்த உடற்கல்வித் தீபம், இதுபோன்ற பல புதிய பள்ளிகளைத் திறக்கவும், புதிய புதிய உடற் கல்வியாளர்களை உருவாக்கவும் போன்ற, உணர்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தின. அவர் சமுதாயத்தில் எதிர்பார்த்த மாற்றங்கள் விளைந்திட உதவின. நவீன உடற் கல்வி முறைகளின் நிறுவனர் (Founder) ஜான் சைமன் என்பவர், பேஸ்டவ் பள்ளியின், முதல் ஆசிரியராகப் பணியாற்றும் பேறு பெற்றிருந்தார். இவர் அந்தப்பள்ளி மாணவர்களுக்கு அதிகாலையில் 1 மணி நேரமும், மாலை நேரத்தில் 2 மணி நேரமும், விளையாட்டுக்கள், உடற் பயிற்சிகள் கற்றுத் தருகின்ற பொறுப்பேற்றிருந்தார். அந்த நேரத்தில் அவர் தந்த பயிற்சிகளில் பல தரப்பட்ட விளையாட்டுக்கள், ஜிம்னாஸ் டிக்ஸ், பொழுது போக்கு விளையாட்டுக்கள், ஓடுகளப் போட்டிகள் எல்லாம் இடம் பெற்றிருந்தன. கத்திச்சண்டை, குதிரையேற்றம், நாட்டியம் போன்ற பயிற்சிகள் பள்ளிக் கூடங்களில் அவசியமில்லாத பயிற்சிகள் என்னும் கருத்தை முதலில் இவர் வெளியிட்டதோடு நில்லாமல், இவற்றை நீக்கி விட்டு புதிதாக, ஓட்டம், தாண்டுதல், எறிதல், மல்யுத்தம் போன்றவற்றை மாணவர்களுக்குக் கற்பித்தார். இவர் காலத்தில் டென்னிஸ், இறகுப் பந்தாட்டம், சாய்வுப் பலகை விளையாட்டு (Sea-Saw) போன்றவையும் சிறப்பிடம் பெற்றன.