பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா శా+- ===ur=ణా--= L இளைஞர்களுக்கு ஜிம்னாஸ்டிஸ் என்ற நூலில் இவர் பலதரப்பட்டப் பயிற்சி. முறைகளைத் தொகுத்துயார் யாருக்கு எந்தெந்தப் பயிற்சிகள் ஏற்புடைத்ததாக இருக்கும் என்ற அடிப்படை ஆய்வுடன், விரிவாகக் கொடுத்திருந்தது, மக்களுக்கு மாபெரும் வழி காட்டி நூலாக அமைந்திருந்தது. விளையாட்டுக்கள் என்ற நூலில் இவர் 150 விளையாட்டுக்கள் பற்றி விளக்கி, அவற்றை விளையாடு வோர் திறமைகளுக்கு ஏற்ப எப்படி பங்கு பெற வேண்டும் என்ற குறிப்புக்களுடன் கொடுத்திருந்தார். இவருடைய கொள்கையும், கடமை உணர்வான பயிற்றுவிப்பும் சமுதாயத்தில் பெரும் மறுமலர்ச்சியை உண்டு பண்ணின. பெருங் குடிமக்கள், பணக்காரக் குடும்பத்தினர், தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலே ஜிம்னாஸ் டிக்ஸ் பயிற்சியாளர்களைப் பணி அமர்த்திக் கொண்டது சமுதாயத்தில் ஏற்பட்ட ஒரு பெரும் மாற்றமேயாகும். கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் ஜிம்னாஸ் டிக்ஸ் பயிற்சிகள் மும்முரமாக நடைபெற்றன. பொலிவுற்றன. அப்பொழுது ஏற்பட்டிருந்த அரசியல் குழப்பங்களும் அடிக்கடிஏற்பட்ட யுத்தங்களும், உடற்கல்வி பாடங்களையும், பயிற்சிகளையும் சிறிதும் பாதிக்கவில்லை. என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். கட்ஸ் மத்ஸின் இலக்கிய நூல்கள், 50 ஆண்டு கால அவரது தொடர்ந்த உடற் கல்வித் துறை சேவை, ஜெர்மனி நாட்டில் உடற் கல்வியின் உன்னத வளர்ச்சிக்கு அஸ்திவார மிட்டன. இதன் காரணமாக, இவர் ஜெர்மன் ஜிம்னாஸ்டிக்ஸின் தாத்தா என்று செல்லமாகப் புகழப்பட்டார்.