பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக நாடுகளில் உடற்கல்வி 131 கால்சட்டை, குட்டையான பட்டு (ஜாக்செட்) மேலாடை என்பவை சீருடையானது. 1812ம் ஆண்டு, அதிகமான உடற்பயிற்சி சாதனங்கள் வைக்கப்பட்டதால், பயிற்சி நிலையமும் விரிவுப்படுத்தப் பட்டது. 500க்கு மேற்பட்டவர்கள் பயிற்சி பெற வந்து விட்டதால், இடத்தை விரிவு படுத்திடும் பணியும் தொடர்ந்தது. பெரியவர்கள், பெற்றோர்கள் எல்லோரும், ஞாயிற்றுக் கிழமைகளிலும், ஓய்வு நாட்களிலும் வந்து பயிற்சி பெற அனுமதிக்கப்பட்டனர். இவர்களைக் கண்காணித்து வழி நடத்திட, தலைவர்கள் என பலரை லூட்விக் ஜான் நியமித்தார். - பயிற்சிபெறும். இத்தகைய வலிமைமிக்க வீரமுள்ள இளைஞர்கள் மூலமாகத்தான் நாட்டு விடுதலையைப் பெறமுடியும் என்று ஜான் உறுதியாக நம்பினார். இவரது ஜிம்னாஸ் டிக்ஸ் பயிற்சி முறைகளை நாடு முழுவதும் நிறைவான மனதுடன் ஏற்றுக்கொண்டதால் பெரிய நகரங்களில் எல்லாம், இளைஞர்கள் ஒன்று திரண்டு, புதிய புதிய ஜிம்னாஸ் டிக்ஸ் பயிற்சி அமைப்புகளை உருவாக்கினர். ஜெர்மன் நாட்டிலுள்ள மாநிலங்களின் இளவரசர்களும் பிரபுக்களும், இந்த ஜிம்னாஸ்டிக்ஸ் இயக்கத்திற்குத்தங்களின் திரண்ட ஆதரவை அளித்தனர். பிரெஞ்சுக் காரர்களின் ஆதிக்கத்தை அடியோடு நீக்கவேண்டும் என்ற பெரும் இலட்சியமே. அவர்களை உதவச் செய்தது. 1813ல் சுதந்திரப்போர் ஒன்றை ஜெர்மனியர் பிரெஞ் சுக்காரர்களுக்கு எதிராகத் தொடங்கியபோது, ஜானும் அவரது ஆதரவாளர்களும் இராணுவத்தில் சேர்ந்து போராடினர். அதில் வெற்றி பெற்ற பிறகு, மீண்டும் (Turn platz) எனும் தரைப்பயிற்சி நிலையத்திற்கு வந்து சேர்ந்தனர்.