பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா ஜிம்னாஸ் டிக்ஸ் செயல்முறைகளில் மிகவும் ஈடுபாடு, உள்ளவராக விளங்கினார். இவருக்குப் பெரிய உடற்கல்வித் தலைவர்களாகத் திகழ்ந்த, கட்ஸ்மத்ஸ், ஜான், எய்சிலின் போன்றவர்களோடு பேசிப் பழகும், பயிற்சிபெறுகின்ற வாய்ப்புக்கள் கிடைத்ததே அத்தகைய ஈடுபாட்டுக்குக் காரணமாகும. இவர் 1833 முதல் 1848 வரை, ஸ்விட்சர்லாந்தில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். ஜான் என்பவர் உடற்கல்வியை பள்ளிப்பாடங்களில் ஒன்றாக்கும் முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. மாறாக அரசியல் நோக்கத்திற்காகவும் அரசியல் விழிப்புணர்ச்சிக் காகவும் ஜான் உடற்கல்வியைப் பயன்படுத்திக் கொண்டார். அவ்வாறு பயன்படுத்தினாலும், அதுவும் ஒரு நன்மையாகவே பின்னாளில் முடிந்தது. அதாவது, கல்வி அதிகாரிகளும், அலுவலர்களும், உடற்கல்வியின் முக்கியத்துவத்தையும், முதன்மைப் பண்புகளையும் அறிந்து கொள்கின்ற நிலைமை ஏற்பட்டது. இந்த சந்தர்ப்பத்தை அடால்ப் நன்கு பயன்படுத்திக் கொண்டார். அவர் பள்ளிப் பாடத்திட்ட்ங்களில் உடற் கல்வியையும் ஒன்றாக இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். பாடுபட்டார். இதற்காக இவர் இரண்டு நூல்களை இயற்றினார் அதற்கு ‘Systems for Gymanstics; The manual of Gymanstics for Schools." என்றும் பெயரிட்டார். இவரது அறிவாண்மையை உணர்ந்த அரசு, ஹெசி நகரில் உள்ள பள்ளிகளில், ஜிம்னாஸ்டிக் பயிற்சிகளைப் பாடமாகக் கற்பித்துக் கொடுத்து உதவுமாறு அழைப்பு விடுத்தது. அதனை ஒப்புக் கொண்ட அடால்ப், கிராண்ட்