பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக நாடுகளில் உடற்கல்வி 141 பெற வேண்டும். உடற்கல்வி ஆசிரியராக விரும்புகிறவர்கள், இந்த 1% ஆண்டு காலப் பயிற்சிக்குப் பிறகு மேலும் ஓராண்டு சிறப்புப் பயிற்சிப் பெறவேண்டும். +. அதாவது, ஒவ்வொரு பல்கலைக் கழகத்திலும் ஒரு உடற்கல்விப் பயிற்சி நிறுவனம் அமைக்கப்பட்டிருந்ததுதான், நாசி ஆட்சியின் மேன்மைமிகு செயலாகும். நாசி ஆட்சியில் 230 ஏக்கர் பரப்பளவில், ஒரு பெரும் விளையாட்டரங்கம் ஒன்று கட்டப்பட்டது. ஒலிம்பிக் விளையாட்டரங்கம் நீச்சல் குளம், வளைகோல் பந்தாட்ட ஆடுகளம், டென்னிஸ் ஆடுகளம் போன்ற பல விளையாட்டு களுக்கு சிறந்த வசதியளிக்கும் வகையில் கட்டப்பட்ட இந்த அரங்கம், நவீன உலகத்தின் தேசிய அரங்கம் என்று எல்லோராலும் போற்றப்பட்டது. இந்த அரங்கத்தில் தான் 1936ம் ஆண்டின் ஒலிம்பிக் பந்தயங்கள் நடைபெற்றன. பிளவுபட்ட ஜெர்மனி இரண்டாம் உலகப் போருக்குப்பின் நாசி ஆட்சி வீழ்ந்தது. ஒன்றாக இருந்த ஜெர்மனி, கிழக்கு ஜெர்மனி, மேற்கு ஜெர்மனி என்று இரண்டாகப் பிளவுபட்டது. கிழக்கு ஜெர்மனி சோவியத் மற்றும் அதன் கூட்டமைப் புக்குள் ஒன்றாகவும், மேற்கு ஜெர்மனி மேலை நாடுகளின் கூட்டமைப்புக்குள் ஒன்றாகவும் மாறிக் கொண்டன. கிழக்கு ஜெர்மனி இந்த நாட்டில், உடற்கல்வியானது பாடத்திட்டங்களில் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது. ஜெர்மன் அக்காடமி ஆப் பிசிகில் எஜூகேஷன் என்ற நிறுவனத்தில், உடற் கல்வி ஆசிரியர்களுக்குப் பயிற்சி தரும் நிறுவனமாக அமைந் துள்ளது. -