பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக நாடுகளில் உடற்கல்வி 145 டென்மார்க்கில் கோபன்கேகன் என்ற இடத்தில் படித்து வந்தபோது, கத்திச் சண்டையைக் கற்றுக் கொள்ளக் கூடிய ஒரு சூழ்நிலை அமைந்தது. அவரது வலது கரம் பாதிக்கப்பட்டு அசைக்க இயலாத நோய் (oேut) ஒன்றால் அவதிப்பட்டபோது, கத்திச் சண்டைப் பயிற்சிகள் செய்த காரணத்தால், கைவலி நீங்கி, குணமடைந்தார். அதனால் உடல் குறைகளை நிவர்த்திக்கும் சக்தி, உடற்கல்விக்கும் பயிற்சிக்கும் உண்டென்று கண்டு கொண்டு, அதிலே தீவிர கவனமும், பயிற்சியும் செய்யத் தொடங்கினார். அவர் 1804ம் ஆண்டு, ஸ்வீடன் நாட்டிற்கு வந்தார். லண்ட் (Lund) பல்கலைக் கழகம் அவரை கத்திச் சண்டைப் பயிற்சியாளராக வேலையில் அமர்த்தியது. 8 ஆண்டு காலம் லிங் அங்கே பணியாற்றினார். மாணவர்களுக்குக் கத்திச்சண்டையுடன், குதிரை சவாரி, தாண்டிக் குதித்தல், நீச்சல் மற்றும் ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சிகளையும் கற்றுத் தந்தார். இந்த அனுபவங்களுடன் உடற் கூறு இயல் மற்றும் உடல் இயக்க இயல் இவற்றிலும் ஈடுபாடு கொண்டு கற்றுத் தேர்ந்து, உடற்கல்வி ஒரு விஞ்ஞானமே என்பதை உறுதிப் படுத்திக் கொண்டார். உடற் பயிற்சிகள் யாவும் உடலுக்குள்ளே இருக்கின்ற அடிப்படை திறமைகளை எல்லாம் மெருகேற்றி வெளிக் கொணரும் வல்லமையைப் பெற்றிருக்கின்றன என்பதையும் அனுபவத்தின் மூலமும், ஆய்வின் மூலமும் அறிந்து உணர்ந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து, தசைகள், இதயம் நுரையீரல்கள், மற்றும் முக்கியமான உள்ளுறுப்புக்கள் யாவும்