பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 46 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா உடற்பயிற்சியால் எவ்வளவு தூரம் மேன்மையடைகின்றன என்பதையும் ஆராய்ச்சி செய்து அறிந்து கொண்டார். இவ்வாறாக, உடலின் அடிப்படைத் தன்மைகளையும் உண்மைகளையும் புரிந்து கொண்டு, அதற்கேற்றவாறு தேவையான தேர்ந்த பயிற்சிகளைத் தந்து, தேகத்தை செம்மைப்படுத்த முடியும் என்ற ஓர் இனிய முடிவுக்கு லிங் வந்து விட்டார். - லிங்கின் உடற்கல்விக் கொள்கை 1. இயற்கை விதிகளை அறிந்து கொள்வது போலவே, தேகத்தின் தன்மையையும் அறிந்து கொள்ளும் போதுதான், உடற்கல்வியையும் முழுமையாக அறிந்து கொள்ள முடியும். 2. பலஹlனப்பட்டவர்களை பலப்படுத்த உடற் பயிற்சிகள் உதவுகின்றன. அதுபோலவே, மக்களை வலிமையுள்ளவர்களாக மாற்றவும் உதவுகிறது. 3. மக்களிடையே பல தரப்பட்டவர்கள், பலதிறப் பட்டவர்கள் உள்ளனர். மக்களிடையே உள்ள உடல் வேற்றுமையை உணர்ந்து, அதற்கேற்றவகையில்தான், உடற் பயிற்சிகளையும் தந்தாக வேண்டும். 4. உடற்கல்வி ஆசிரியர்களுக்கும், போதகர்களுக்கும் உடல் அமைப்பு, உள்ளுறுப்புக்களின் செயல்தன்மை இயக்கங்கள்; அவைகளுக்குப் பயிற்சிகள் எல்லாம், உதவும் என்ற அறிவும் ஞானமும் அதிகமாக இருக்க வேண்டும். லிங்கின் அறிவும் திறமையும் நாட்டு மக்களுக்கு உதவுகின்ற சூழ்நிலை, எல் வீடனில் 19ம் நூற்றாண்டின் முதற்பகுதியில் அமைந்தது தான் அவரது அதிர்ஷடமாக அமைந்தது.