பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக நாடுகளில் உடற்கல்வி 149 /. வெறுங்கைப் பயிற்சிகள்: (Exercise without Apparatus) உதவி சாதனங்கள் எதுவுமின்றி நின்றுகொண்டே செய்யும் வெறுங்கைப் பயிற்சிகள். கைகளை இயக்குதல் தலை இயக்கம், இடுப்பு இயக்கம் முதலியன. கைகளை வேகமான சுழற்றுதல்; கால்களை சற்றுவேகம் குறைவாக இயக்குதல்; தலையை நிதானமாக இயக்குதல், இதன் இடுப்பு அசைவதை மெதுவாக இயக்குதல், என்பவை பயிற்சி முறைகளாகும். 2. சாதனங்களுடன் பயிற்சிகள் (Exercise with Apparatus) சாதனங்களை வைத்துக்கொண்டு, அவற்றில் ஏறி இறங்கி, அவற்றை இழுத்துச் செய்கின்ற பயிற்சிகள் ஏணியில் ஏறுதல், கயிற்றில் தொங்குதல், ஏறுதல், கம்பத்தில் சமநிலையுடன் பயிற்சி செய்தல். கோலூன்றித் தாண்டல், துள்ளி விழுதல் போன்றவை இதிலடங்கும். _ லிங்கின் உடற்கல்வி அமைப்புமுறை நாடெங்கும் நல்ல வரவேற்பைப் பெற்றது, லிங்கின் இறுதிக் காலம் 1839. அந்த ஆண்டிலிருந்து 1939ம் ஆண்டு நூறு ஆண்டு ஆகியது என்பதைக் கொண்டாடும் வகையில் லிங்கியாட் (Lingiad) என்று பெயர் சூட்டி அந்த நாடு விழாகொண்டாட, உலக நாடுகளிலிருந்து பல நாடுகள் வந்து கலந்து கொண்டது, லிங்கின் சேவையை ஏற்றுக் கொண்டதாகத்தானே அர்த்தம் 3. லால்ஸ் கேபிரியல் பிரேன்டிங் (Lars Gabriel Branting) இவரது வாழ்க்கைக் காலம் 1799-1881 ஆகும். உடற் கல்வித்துறையில் இவரதுசேவைக்காலம் 23 ஆண்டுகள் ஆகும். . . ---