பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15O டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா கேபிரியல் பிரென்டிங் இந்தத் துறையில் சேர்ந்தவிதமே ஆச்சரியமான ஒன்றாகும். இவர் இளம்வயதில், தனது நலிந்த உடலினை நலமாக்கிக்கொள்ள, அப்பொழுது இயக்குநராக இருந்த லிங்கிடம் பயிற்சி பெறபோய்ச் சேர்ந்தார். சிறுவனின் ஆர்வத்தையும், உற்சாகத்தையும், உடற்பயிற்சிகள் மீது வைத்திருந்த நம்பிக்கையையும் கண்டுமகிழ்ந்த லிங்ராயல் சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆட் ஜிம்னாஸ் டிக்ஸ் வகுப்பில், இவரையும் ஒரு மாணவராக ஏற்றுக் கொண்டார். பயிற்சியளித்தார். சிறந்த மாணவனாகத் திகழ்ந்த கேபிரியலை, லிங் தனது, நிறுவத்தில் ஆசிரியராகவும் அமர்த்திக் கொண்டார். 1832ம் ஆண்டில் லிங் இறந்த பிறகு, கேபிரியல் அந்த நிறுவனத்தின் இயக்குநராகி விட்டார். குரு நாதர் இடத்திலே இவர் அமர்ந்த 23 ஆண்டுகள் சேவைபுரிந்தார். அப்பதவியிலிருந்து 1862ல் ஓய்வு பெற்றார். இவரது கொள்கை. உடற் பயிற்சியால் ஏற்படுகின்ற பயன்கள் தசைமண்டலத்திற்கு மட்டுமல்லாது, நரம்பு மண்டலம், இரத்த ஓட்ட மண்டலம் அனைத்திற்குமே ஏற்றதாகி உதவுகிறது என்பது தான். 4. ø6můc_oi stqGovavarð (Gustau Nyblaeus) இராணுவ அதிகாரியாகப் பணியாற்றிய கஸ்டவ், 1862ம் ஆண்டு, கேபிரியல் பிரேண்டிங் இருந்த பதவியில் அமர்ந்தார். இவர் காலத்தில், உடற்கல்வி ஆசிரியர்கள் பயிற்சி காலம் அதாவது, பயிற்சி நிறுவனத்தில் பெறுகிற பயிற்சிக் காலம் 1 ஆண்டிலிருந்து 2 ஆண்டு காலமாக விரிந்தது. பெண்களுக்கும் பயிற்சிபெறுகிற வாய்ப்பு வழங்கப்பட்டது.