பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா வந்து சோதனை செய்து கண் காணிக்கும் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது. 1946ம் ஆண்டு, இலவச மதிய உணவு ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது. கல்லூரிகளில் உடற் கல்வித் திட்டம் கட்டாயப் பாடமாக இல்லை. அவர்கள் உடல் நிலை முன்னேற அரசு அதிக அக்கறை காட்டியது. ஒய்வு நேரங்களை உடல் வளர்ச்சிக்குப் பயன்படுத்தும் வகையில், வசதிகள் செய்து தரப்பட்டன. பள்ளிகளில் பயிற்றுவிக்கும் பொறுப்பேற்கிற உடற் கல்வி ஆசிரியர்களை உருவாக்கும் பணியை. முதலில் ராயல் சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆப் ஜிம்னாஸ்டிக்ஸ் நிறுவனம் பொறுப்பேற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து, லண்ட் என்ற இடத்திலும், ஸ்டாக் ஹோம் என்ற இடத்திலும் (மகளிர்) உடற் கல்வி ஆசிரியைகளை உருவாக்கும் இரு பயிற்சி நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டன. பொதுமக்களுக்கு உடற்கல்வி பொது மக்கள் உடல் நலம் பெறவும், வலிமையுடன் வாழவும் கூடிய வழிவகைகளை அரசு செய்து தந்தது. ஒவ்வொரு நகரிலும் ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சி அரங்கங்கள், ஏற்படுத்தப்பட்டன. பல உடற் பயிற்சி சங்கங்கள், விளை யாட்டுக் கழகங்கள் குளிர் கால சறுக்கும் விளையாட்டுக்கள் அனைத்திலும் மக்கள் சேரும் வாய்ப்புகளை உருவாக்கித் தந்தன. இத்தகைய சங்கங்களும் கழகங்களும் தேசிய தலைமைக் கழகத்துடன் இணைக்கப்பட்டிருக்கின்றன. உடல் தரமான நிலை பெறுவதற்காக, பல்வேறு விதமான பயிற்சிகளில் போட்டிகள் வைத்து (Badge Test) என்பதாக ஏற்படுத்தி,