பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக நாடுகளில் உடற்கல்வி - 155 மக்கள் மத்தியிலே மங்காத ஆர்வத்தை தேசியக் கழகம் தெளித்து வந்தது. * மக்கள் மத்தியிலே உடற் பயிற்சி ஆர்வம் பெருகிட, 1929ம் ஆண்டு முதல், வானொலி, டெலிவிஷன் மூலமாக ஏற்பாடுகளும் செய்து தரப்பட்டன. வீட்டிலே ஜிம்னாளப்டிக்ளப் குடும்பத் தலைவிகளுக்கு ஜிம்னாஸ்டிக்ஸ் என்று புதிதாகப் பயிற்சிகளை அறிமுகப்படுத்தி, கிராமப்புற மக்களுக்கும் உடல் திறத்தில் உற்சாகம் ஊட்டியது அரசு. தினந்தோறும் உடல் திறப் பயிற்சிகளை உடற்பயிற்சி ஆசிரியர்கள் மூலம் மக்களுக்குக் கற்றுத் தரும் முயற்சிகளும் மேற் கொள்ளப்பட்டன. தொழிலாளர்களுக்கும் திட்டவட்டமான பயிற்சி முறைகள் அளிக்கப்பட்டன. விடுமுறை நாட்களில் உடற்பயிற்சி செய்ய வெளியிடங்களுக்குச் செல்வோருக்கு விடுமுறைப் பணம் வழங்கப்பட்டது. இதனால் தொழிலாளர்கள் திறமை பெருகியது. வேலை நேரத்தில் விபத்துக்கள் குறைந்தன. நோய் வாய்ப்படும் தொல்லை அதிகம் ஏற்படாமல் அகற்றப்பட்டது. ஸ்வீடன் நாட்டில் டென்னிஸ், கோல்ப் அதிகமாக விரும்பி ஆடப்படும் ஆட்டங்களாக உள்ளன. காலநிலை வசதியாகக இல்லாத காரணத்தால், கிரிக்கெட், வளைகோல் பந்தாட்டம், தளப்பந்தாட்டம் போன்ற ஆட்டங்களை - ஆட, இயலாமற் போவதால், இவைகள் மேல் அதிக அக்கறை இல்லாமல் போயிற்று. நீச்சல், துப்பாக்கிச் சுடுதல், குதிரைசவாரி, மல்யுத்தம், குத்துச்சண்டை முதலியவை உற்சாகம் தரும்பொழுதுபோக்கு விளையாட்டுக்களாக அமைந்தன. குளிர்கால விளையாட்டுக்களான பனிச்சறுக்கல், பணிமீது பாய்ந்து