பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா њин செல்லல் போன்ற விளையாட்டுக்கள் சிறப்பான இடத்தைப் பெற்றிருக்கின்றன. 6%, 6%06ma/actCo Goga (The Lingiad) 1939ம் ஆண்டு, ஸ்டாக்ஹோம் நகரில், பெரிய விளையாட்டு விழா ஒன்றை ஸ்வீடன் அரசு நடத்தியது. அந்த விழாவிற்கு லிங் விளையாட்டு விழா என்று பெயர் குட்டப்பட்டது. அதாவது 1839ம் ஆண்டு, பெர் ஹென்ரிக் லிங் இறந்த ஆண்டு. அவரது சேவையை அரசு போற்றி வரவேற்றிருக் கிறது என்பதற்கு இவ்விழாவே நிதர்சனமான உண்மையாக விளங்குகிறது. ■ உலகநாடுகள் பலவற்றிலுமிருந்தும் ஜிம்னாஸ்டிக்ஸ் குழுக்கள் வந்து, காட்சிப்பயிற்சிகளை செய்து காட்டின. இவ்விழாவில் ஜிம்னாஸ்டிக்ஸ் பொருட்காட்சியும், உலக ஜிம்னாஸ்டிக்ஸ் கருத்தரங்கமும் இடம் பெற்றன. ஜெர்மனியிலிருந்து விசேஷ குழு ஒன்று வந்து 3 மணி நேரக் காட்சிப் பயிற்சிகளை செய்து காட்டியதும்; 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்க்ள 100 பேர் ஜிம்னாஸ்டிக்ஸ் குழுவாக டென்மார்க்கிலிருந்து வந்து, காட்சிப்பயிற்சிகள் செய்து காட்டியதும், இவ்விளையாட்டு விழாவின் மேன்மையை மிகுத்துக் காட்டுவனவாகும். இரண்டாவது லிங் விளையாட்டு விழா 1949ம் ஆண்டு நடத்தப்பெற்றபோது, 46 நாடுகளுக்கு மேல் வந்து விழாவில் கலந்துகொண்டதும், இந்தியாவும் அந்த விழாவிற்கு 20 பேர்கள் அடங்கிய குழு ஒன்றை அனுப்பியதும், இந்தியக்குழு அனைவராலும் பாராட்டப்பட்டதும் வரலாறு போற்றும் விஷயமாகும். இந்தச் சாதனையைப் படைத்தவர்கள் அமராவதி நகரைச் சேர்ந்த ஹனுமான் லியாயம் பிரசாரக் மண்டலக் குழுவினராவார்.