பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக நாடுகளில் உடற்கல்வி 157 (7. டென்மார்க்கில் உடற்கல்வி) டென்மார்க் ஒரு குடியரசு நாடு, முன்னேறி வரும் நாடு, ஆகவே, உடற் கல்வியில் ஒருமித்த கருத்தை வைத்து, உற்சாகத்துடன் வளர்த்து, உயர்ந்து நின்றதில் ஆச்சரியப் படுவதற்கு அர்த்தமேயில்லை. ஐரோப்பா கண்டத்தில், மறுமலர்ச்சி காலம் முகிழ்த்தபோது, அந்தப்புதிய இயக்கத்திற்கு ஆதரவு கொடுத்ததோடு மட்டுமன்றி, தனது நாட்டிலும் திளைக்கச் செய்த பெருமைகொண்ட புதுமை விரும்பிய நாடு இது. டென்மார்க் நாடானது உடற்கல்வியைப் பொதுக் கல்வியுடன் இணைந்த கல்வியாக ஆக்கி, ஐரோப்பா கண்டத்திலேயே முதலாவது நாடாகப் பெருமைபெற்றுக் கொண்டது என்று உலக வரலாறு வானளாவப் புகழ்ந்துரைக்கிறது. இந்த நாட்டின் இணையிலா வளர்ச்சிக்குக் காரண கர்த்தாவாக அமைந்தவர்களின் முதன்மை பெற்றவர்கள் பிரான்ஸ் நாச்டிகெல்; பி.வr. நூட்சென்: ப. லின்டார்டு; நீல்ஸ் டிக் என்பவர்கள். அவர்கள் ஆற்றிய அருந்தொண்டினை இனி காண்போம். c9oacöton) staafg6lez60 (Franz Nachtegall) டென்மார்க் நாட்டில் புதிய உடற்கல்வியைப் புகுத்திப் பிரபலமடையச் செய்த பெருமை பிரான்ஸ் நாச்டிகெலுக்கு உண்டு. இவரது வாழ்க்கை காலம் 1777 முதல் 1847ம் ஆண்டு வரையாகும்.