பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக நாடுகளில் உடற்கல்வி 159 1814ம் ஆண்டு, 7 முதல் 14 வயது வரையில் உள்ள பிள்ளைகளுக்குக் கட்டாயக் கல்வி வேண்டும் என்று அரசாங்கம் ஓர் ஆணையைப் பிறப்பித்தது. அதே ஆணை, உடற் கல்வியையும் கற்றாக வேண்டும் என்று ஆரம்பப் பள்ளிகளுக்கும் விரிவாக்கித் தந்தது. அத்துடன் நில்லாமல், பள்ளிகளையும் பிள்ளைகளுக்குத் தேவையான பயிற்சிக்கான வசதிகளை செய்து தருமாறும் கேட்டுக் கொண்டது. இப்படியாக, ஆரம்பப் பள்ளிகளில், சிறுபிள்ளைகளுக்கு ஜிம்னாஸ்டிக்ஸ் கற்றுக்கொள்ள ஆணைபிறப்பித்த நாடு, ஐரோப்பிய நாடுகளிலே முதலாவது நாடு டென்மார்க் என்பது தான் நாம் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய செய்தியாகும். 1821 ம் ஆண்டு, இராணுவ வீரர்களுக்கும், பொது மக்களுக்கும் ஜிம்னாஸ் டிக்ஸ் பயிற்சிகளை அளிக்கும் இயக்குநராக பிரான்ஸ் பணி அமர்த்தப் பட்டார். அந்தக் காலக் கட்டம் நெப்போலியப் போர்களும் ஏறத்தாழ முடிந்து விட்டிருக்கிற நிலைமையில் இருந்தது. ஆகவே, பிரான்ஸ் தமது ஆரம்ப ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளும் தருணம் வந்து விட்டது என்று, பல முன்னேற்றம் தருகிற முயற்சிகளையெல்லாம் மேற் கொண்டார். அதாவது, டென்மார்க் நாட்டு மக்கள் வலிமை வாய்ந்த வீர மக்களாக விளங்க வேண்டும் என்பது தானே அவரது இலட்சியம். இவர் பள்ளிகளில் ஜிம்னாஸ் டிக்ஸ் பயிற்சிகளைப் பரப்ப, உடற்கல்வி ஆசிரியர்களைப் பயன்படுத்திக் கொண்டார். இவரே ஆரம்பப் பள்ளிகளுக்கான ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சி வழிகாட்டி (Manual of Gymnastics for Elementary Schools) 6T60th Esso &eitsop STQpáleormit. இதை அரசு செலவிலேயே பதிப்பித்து, அனைத்துப் பள்ளி களுக்கும் அனுப்பி வைத்தார். இது ஐரோப்பிய நாடுகளிலே