பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

8. இங்கிலாந்தில் உடற்கல்வி :

எங்கும் வலம் வருகிற சூரியன், எங்களைக் கேட்டுக் கொண்டுதான் எழும், விழும், என்று ஏகாதிபத்தியத்தனமாக இங்கிலாந்து மக்கள் பேசுவார்கள் என்று வரலாற்றாசிரியர்கள் கூறுகிறார்கள். உலகத்தில் பாதியளவு நாடுகளில் ஆட்சியைப் பிடித்து, அடிமையாக்கி, ஆண்ட பெருமையை இங்கிலாந்து பெற்றிருக்கிறது. அதன் கீழ் அடங்கியிருந்த நாடுகளுக் கிடையே, காமன் வெல்த் விளையாட்டுப் போட்டிகள் என்று ஒரு போட்டியையே நடத்துகின்ற நீண்ட வரலாற்றையும் பிரிட்டன் பெற்றுள்ளது. என்ன காரணம் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்! இடப் பரப்பால் இங்கிலாந்து சிறிது நாடுதான் என்றாலும் ஆற்றலில், ஆண்மையில், அறிவுத் திறமையில், போரிடும் வல்லமையில் பேராற்றல் மிகுந்த பெரிய நாடாக அல்லவா உலவி வந்திருக்கிறது! அதற்கு ஒரே காரணம். இங்கிலாந்து மக்கள் இயற்கையாகவே விளையாட்டு உணர்வுள்ளவர்கள். விளையாட்டுவிரும்பிகள். விளையாட்டில் பாசமுள்ளவர்கள். விளையாட்டு தந்த விவேகம் தான், அவர்களை மற்ற நாடுகளிடமிருந்து காத்தது. மற்ற நாடுகளை வென்று அடக்கும் வீரியத்தையும் வழங்கியது. இங்கிலாந்து மக்கள் வெளிப்புற விளையாட்டுக்களில் ஈடுபட்டு வந்தார்கள் என்பது, விளையாட்டு உணர்வானது