பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக நாடுகளில் உடற்கல்வி 167 அவர்களின் உள்ளுணர்வுகளிலே ஊறிக் கிடந்ததுதான் உண்மையான காரணமாகும்! /** வாட்டர் லூ போரின் வெற்றிக்குக் காரணம், FFL6ŵr மைதானத்திலே விளையாடியபோது பெற்ற அனுபவங்கள் தாம் என்பது, இப்போது உலகறிந்த பழமொழியாகப் போய்விட்டதே! இங்கிலாந்தின் தட்ப வெப்ப இயற்கைச் சூழ் நிலை; அவர்களின் தனிப்பட்ட சுதந்திர வேட்கை; இயல்பான விளையாட்டு ஆர்வம் எல்லாம் ஒன்று சேர்ந்து, பிரிட்டனின் உடற்கல்விக் கொள்கையாக உருமாறியிருக்கிறது. இங்கிலாந்தின் உடற்கல்வி வரலாற்றை நாம் இரண்டு விதமாகப் பிரித்து அறியலாம். .. நாம் மேலே கூறிய இயற்கைச் சூழல் ஒன்று. அடுத்தது அயல் நாட்டு மோகத்தினால் அதிகரித்தப் பயிற்சி முறைகள். o இங்கிலாந்து மக்கள் விளையாட்டுக்களில் தான் அதிகமான ஆர்வத்தைக் காட்டியிருக்கின்றார்கள். ஐரோப்பிய நாடுகளில் எல்லாம் உருவாக்கிய ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சி முறைகள், மக்களிடம் கொண்டு போகப்பட்டன. ஆனால் இங்கிலாந்து மக்களுக்கு இயற்கையாகவே விளையாட்டுக் களில் ஈடுபாடு இருந்ததால், அவர்களாகவே அவர்கள் விளையாட்டுக்களில் கலந்து கொண்டு ஆடிமகிழ்ந்ததை, சரித்திரம் நமக்கு சுகமாக நினைவூட்டுகிறது. கிரிக்கெட், கால் பந்தாட்டம், வளை கோல் பந்தாட்டம், டென்னிஸ், பவுலிங் வில் வித்தை, கோல்ப், இறகுப் பந்தாட்டம் போன்ற விளையாட்டுக்கள் எல்லாம் இங்கிலாந்தி லிருந்து தான் தோன்றின. அல்லது உருவாக்கப்பட்டன என்பது தான் சரித்திரம்.