பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா இதற்கும் மேலே மல்யுத்தம், குத்துச் சண்டை, கத்திச் சண்டை, பனிச் சறுக்கல், படகு விடுதல், ஓடுகளப் போட்டிகள் எல்லாவற்றிலும் பிரிட்டிஷ மக்கள் பிரியமுடன் கலந்து கொண்டு, பேரின்பம் பெற்றிருக்கின்றார்கள் என்பது வரலாறு. *..." இங்கிலாந்து மக்களின் இனிய பொழுது போக்கு அம்சங்களில் கனமான பொருட்களை எறிதல், மீன்பிடித்தல், வேட்டையாடுதல், நீச்சல், படகு விடுதல், துப்பாக்கி சுடுதல், உடற் பயிற்சி போன்றவைகளும் அடங்கும். ஆகவே, இங்கிலாந்தில் விளையாட்டு என்பதுதான். உடற்கல்வியாக உலவி வந்திருக்கிறது. மற்ற நாடுகளில் ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சிகள் தாம் உடற்கல்வியாக இருந்து வந்திருக்கின்றன. இங்கிலாந்தில் விளையாட்டுக்கள் அதிகமாக இடம் பெற்றதற்கு நாம் முன்னே கூறிய காரணங்களுட்ன், இன்னொரு காரணத்தையும் நாம் சேர்த்துக்கொள்ளலாம். அதாவது விளையாட்டுக்கள் மனிதர்களுக்கு ஒழுக்கத்தையும், உடல் வலிமையையும் கொடுப்பதுடன், மனிதர்களிடையே மாண்பான உறவுகளையும் வளர்க்கின்றன என்ற கொள்கையில், பிரிட்டன் மக்கள் பெரிதும் நம்பிக்கை வைத்திருந்தனர். அதுவே அவர்களது தேசிய உணர்வாக இருந்து விளையாடுவதற்குரிய உற்சாகத்தை ஊட்டியிருக்கிறது. - இரண்டாவது கட்டம் அயல் நாடுகளிலிருந்து வந்த ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சிகள் பற்றியதாகும். பிரிட்டிஷ மக்கள் விளையாட்டுக்களை வெளிப்புற மைதானங்களில் ஆடி வந்த போது, பிற நாட்டு உடற் கல்விமுறையானது கடன் வாங்கப்பட்டது போல வந்து மக்களிடையே கலந்து கொண்டது.