பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக நாடுகளில் உடற்கல்வி 169 திட்ட மிட்ட உடற் பயிற்சிகள் என்பது ஜெர்மனி, ஸ்வீடன் போன்ற நாடுகளிலிருந்து பெறப்பட்ட ஜிம்னாஸ் டிக் ஸ் பயிற்சிகள் தாம் என்பதும் குறிப்பிடத் தக்கதாகும். - 1832ம் ஆண்டு, ஸ்விட்சர்லாந்திலிருந்து கிலியஸ் (Cials) என்பவரை இங்கிலாந்து நாட்டுக்கு வரவழைத்து, இராணுவ வீரர்களுக்கு ஜிம்னாஸ் டிக்ஸ் பயிற்சிகளைத் தரும்படி கேட்டுக் கொண்டது இங்கிலாந்து அரசு, அவரும் வந்தார். ராயல் மிலிடரி மற்றும் நேவல் அகாடமி (Royal Military and Naval Academy) offlueußsold (5 Qué (550ms, ஆக்கப்பட்டார் கிலியஸ். ஜெர்மனி நாட்டினரான கட்ஸ் மத்ஸ் முறைகளைத்தாம் இவரும் கற்றுத் தந்தார். இருந்தாலும் 3 ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் தனது தாயகத்திற்குத் திரும்பிப் போய் விட்டார். அடுத்து, ஸ்வீடன் நாட்டு ஜிம்னாஸ்டிகளில் முறைகள், இங்கிலாந்தில் கற்பிக்கப்பட்டன. லெப்டினென்ட் கோவர்ப் கார்ல் ஜார்ஜ். போன்றவர்கள் கடுமையான உற்சாகத்துடன் உழைத்தனர். ஆனாலும் நினைத்த எதிர்பார்ப்புகள் ஆங்கே நிகழவில்லை. - அடுத்து, ஸ்காட்லாந்து நாட்டினர் அர்ச்சி பால்டு மக்லாரன் என்பவர் பொறுப்பேற்றார். மருத்துவம் படித்த இவர், கத்திச் சண்டை, பல நாட்டு ஜிம்னாஸ் டிக்ஸ் பயிற்சி முறைகள் பலவற்றிலும் சிறப்பான ஆர்வம் கொண்டிருந்தார். ஜெர்மன், ஸ்வீடன், டென்மார்க்கு ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சி முறைகள் எதுவும் இவருக்கு ஏற்பில்லை இவரைக் கவரவுமில்லை. ஆகவே அவற்றில் உள்ள முக்கியமான' வற்றை மட்டும் தெரிந்தெடுத்துக் கொண்டு, ஒரு புதிய பயிற்சி முறையை உருவாக்கினார்.