பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக நாடுகளில் உடற்கல்வி 171 என்ற கொள்கையை வலியுறுத்தியதாலும், இந்த, ஜிம்னாஸ் டிக்ஸ் பயிற்சி முறைகள் தோல்வியையே தழுவலாயிற்று. இறுதியாக, லிங் ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சி முறைகளில் மக்கள் விருப்பம் கொண்டு கற்கத் தொடங்கினார்கள். ஆர்க்பால்டு மக்லாரனது காலம் 1820 முதல் 1884 வரை ஆகும். - மக்லாரனது உடற்கல்விக் கொள்கை 1. உடல் வலிமையை விட உடல்நலமே சிறந்ததாகும். 2. பதைபதைப்பு, பயம், கவலை, களைப்பு, நரம்புத் தளர்ச்சி போன்றவைகள் குணமாக, உடற்கல்வியே சிறந்த மருந்தாகும். 3. விளையாட்டுக்கள் பொழுது போக்கு அம்ச முள்ளவை. அவை சிறுவர் சிறுமிகளுக்கு உகந்த வளர்ச்சி யைத் தராது. 4. சிறந்த உடல் வளர்ச்சிக்கு உடற்கல்வி இன்றியமை யாததாகும். 5. உடற்பயிற்சியும் மனப்பயிற்சியும் ஒன்றானது. பிரிக்க முடியாதது, ஒன்றுக்கொன்று உறுதுணையானவையாகும். 6. உடற்பயிற்சிகள் வளர்ச்சிக்கு வழிகாட்டிகளாகும். அவை தனிப்பட்டவர்களின் தேகத் திறமை, வயது, வலிமைக்கு ஏற்ப, அறிந்து தரப்படல் வேண்டும். 7. உடற் கல்வியானது பாடத் திட்டங்களுள் ஒன்றாக்கப்படல் வேண்டும். 8. உடற்கல்வியை சரியாக, திட்டமிட்டுச் செயல்பட்டால், தனி மனிதரை மட்டுமல்ல, சமுதாயத்தையே உயர்த்திவிடும்.