பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா கல்விக் கூடங்களில் உடற்கல்வி பள்ளிக் கூடங்களில் லிங் பயிற்சி முறைகளே மேற் கொள்ளப்பட்டன. பெண் ஆசிரியர்களுக்குப் பயிற்றுவிக்கின்ற பொறுப்பாளராக ஸ்டாக்ஹோமைச் சேர்ந்த செல்வி கன்கார்டியா லோப்விங் அமர்த்தப்பட்டார். அவருக்குப் பின் ஆயிரம் உடற்கல்வி ஆசிரியைகளை உருவாக்கிய பெருமை, மேடம் பெர்க்மென் ஒஸ்டர்பர்க் என்பவருக்குக் கிடைத்தது. 1884ம் ஆண்டு ஆசிரியர்களுக்குப் பயிற்சியானது எல்வீடன் ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சிகள் மூலம் தரப்பட்டது. அதாவது, இங்கிலாந்து பள்ளிகள் முழுவதும். ஸ்வீடன் ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சிகளே தொடர்ந்து இடம்பெற்று வந்தன. 1903 - 1904 ஆண்டு இரண்டு கமிஷன்கள் நியமிக்கப்பட்டன. அவை ராயல் கமிஷன் ஆப் பிசிகல் டிரெயினிங், மற்றும் ஆய்வுக் கமிட்டி என்பவையாகும். உடற்பயிற்சியில் தொய்வும் தேக்கமும் ஏன் ஏற்பட்டது என்பதைக் கண்டறிந்து கூற அமைக்கப்பட்ட மேலே கூறிய இரண்டு கமிஷன்களும், தங்கள் ஆய்வின் உண்மையை வெளிப்படுத்தி, அதற்கான வழிவகைகளையும் விளக்கமாகத் தந்தன. 1. பள்ளிகளில் உடற்கல்வியானது பாடத் திட்டமாக்கப் பட வேண்டும். 2.ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சிக்கான உதவி சாதனங்கள் மற்றும் ஆடுகளங்களைப் பழுது பார்க்க, செப்பனிட, பண் உதவி போன்ற வழி வகைகளை செய்திட வேண்டும்.