பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக நாடுகளில் உடற்கல்வி 173 3. தகுதி பெற்ற உடற்கல்வி ஆசிரியர்கள் அதிகம் வேண்டும். 4. விளையாட்டு விழாக்கள், போட்டிகள், முதலிய வற்றை நடத்தி, பள்ளிகளும், பொது ஆடுகளங்களும் கட்டாயமாகப் பயன்படுத்தப்பட வேண்டும். இதைத் தொடர்ந்து 1904ம் ஆண்டு அதிகாரபூர்வமான உடற்கல்விப் பாடத்திட்டம் என்ற ஒரு நூல் எழுதப்பட்டது. 1944ம் ஆண்டு, இங்கிலாந்தில் புதிய கல்விச் சட்டம் ஒன்று கொண்டுவரப்பட்டது. அதன் பயனாக மாநில ஆரம்பப் பள்ளிகளில் உடற்கல்வியும் பாடத்திட்டத்தில் ஒன்றானது. பாடங்கள் வகுப்புக்களில் பயிற்றுவிக்கப்பட்டன. வாரத்திற்கு 3 மாலை நேரங்கள் உடற்கல்விக்காக ஒதுக்கப்பட்டன. மாநில உயர்நிலைப் பள்ளிகளில், வாரத்திற்கு 4 வகுப்புக்கள் தேர்ச்சி பெற்ற தகுதியுள்ள ஆசிரியர்களால் நடத்தப்பட்டன. விளையாட்டுக்களில் சிறப்புத் தேர்ச்சி பெற்றவர்கள் தாங்களாகவே மேற்கொண்ட முயற்சிகளால் பொதுப் பள்ளிகள் (Public Schools) எனும் பெயரில் பள்ளிகளை அமைத்து, விளையாட்டுக்களை கற்பித்தனர். மாணவர்களை வகுப்பு வாரியாக (Houses) பிரித்துக் கொண்டு, வகுப்புக்களிடையே போட்டிகள் நடத்தினர். ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சிகளைக் கற்றுத்தந்தாலும். அத்தகைய பயிற்சிகள் விளையாட்டுகளுக்கு அடுத்த நிலையையே பெற்றிருந்தன.