பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா -- பல்கலைக் கழகங்களில் விளையாட்டுகளுக்கு உரிய இடமும் வசதிகளும் செய்து தரப் பட்டிருந்த போதும், மாணவர்களுக்கு அது விருப்பப் பாடம் போலவேதான் இருந்தது. அதாவது விரும்பிய மாணவர்கள் பயிற்சிகளிலும், விளையாட்டுக்களிலும் வந்து கலந்து கொண்டு முன்னேறலாம் என்பதாகவே அமைந்திருந்தது. ஆரம்பப் பள்ளி. ஆரம்பப் பள்ளி மாணவ மாணவியர் கட்கு வைத்தியப் பரிசோதனை வைக்கப்பட்டு, பல், உடல் நலம் இவற்றை சோதித்தறியும் வகைகள் நிகழ்ந்தன. மருத்துவ சோதனைக்குப் பிறகு, நலக் கல்வி மட்டும் நல்காமல், இலவச மதிய உணவும் தேவைப்படும் குழந்தைகளுக்கும் பாலும் வழங்கப்பட்டன. உடற்கல்வி ஆசிரியர்கள் அதிக எண்ணிக்கையில் வெளிவர வேண்டுமென்பதற்காக, உடற்கல்விப் பயிற்சிக் கல்லூரிகள் பல தோற்றுவிக்கப்பட்டன. பொது மக்களுக்கு உடற்கல்வி இங்கிலாந்து மக்கள் இயற்கையாகவே விளையாட்டுப் பிரியர்கள். அவர்களுடைய விளையாட்டுத் திறன்களை வளர்க்கவும் அவர்களுக்கிடையே விளையாட்டுப் போட்டிகளை நடத்தவும், பல்வேறு விதமான விளையாட்டு களுக்கும் தலைமைக் கழகங்கள் தோன்றின. உதாரணமாக: தேசியத் துப்பாக்கிச் சுடும் தேசியக் கழகம்; கால்பந்தாட்டக்கழகம், தேசிய வளைகோல் பந்தாட்டக்கழகம், தேசிய புல்தரை டென்னிஸ் கழகம், போன்றவை தொடங்கப்பெற்று, பொதுமக்கள் விளையாட்டு ஆர்வத்திற்குத் துணைதந்தன, தொடர்ந்தன.1905ம் ஆண்டு பிரிட்டன் ஒலிம்பிக் கழகம் தோற்றுவிக்கப்பட்டது. இது