பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 - டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா 9ே. சோவியத் யூனியனில் உடற்கல்வி : ரஷய நாட்டை (Czar) ஸார் என்ற இன மன்னர்கள் ஆட்சி செய்த காலத்தில், நாட்டு மக்கள் கல்வி பெற ஒரு சிறிதும் வாய்ப்பு பெறவில்லை. வாய்ப்பளிக்கவே ஆண்டவர்கள் விரும்பவில்லை. பொதுக் கல்வியே பொதுமக்கள் வாழ்வில் புதைக்கப் பட்டுக் கிேடந்தபோது, உடற்கல்விக்கு எப்படி இடம் கிடைக்கும் மேட்டுக்கடி மக்களுக்கு கல்வி கற்கும் வாய்ப்பு கிட்டியிருந்த நேரத்தில், சிறிய அளவில் உடற் கல்விமுறை கொஞ்சம் இடம்பெற்றிருந்தது. அந்தமுறை ஜெஸ் காப்ட் முறை (Zescaft system) என்று அழைக்கப்பட்டது. அதாவது ஜெஸ்காப்ட் என்ற ரஷய உயிரியல் அறிஞர் ஒருவர், ஸ்வீடன் நாட்டு லிங் ஜிம்னாஸ்டிக்ஸ் முறையைத் தழுவி, பயிற்சி முறைகளை அமைத்திருந்தார். அதுவும் ஒரு குறிப்பிட்ட அளவில். வசதியுள்ளதோர் குறிப்பிட்ட மக்களுக்கு போய்ச் சேர்ந்தது. ஸார் மன்னர்கள் ஆட்சியை மாற்றிட முனைந்த பெரும்புரட்சி, 1917ம் ஆண்டு வெற்றி பெற்ற போது, நாட்டு நிலைமை பெரும்பாலும் மாற்றம் பெற்றது. அப்பொழுது உடற்கல்விக்கு உரிய மரியாதையும் கிடைத்தது. புதிய ஆளும் பொறுப்பேற்ற சோவியத் தலைமையின் கீழ், திட்டமிட்டஉடற்கல்வியில் பெரும்புரட்சியே ஏற்பட்டது. உலகம் முழுவதும் உடற்கல்வி என்று அழைத்ததை, சோவியத் நாட்டினர் உடலியல் கலாச்சாரம் (Physical Culture) என்று அழைத்தனர்.