பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


கிடக்க முடியுமா? அவர்கள் மற்றவர்கள் உணவை திருடித் திண்ணவும் அனுமதிக்கப்பட்டனர்.

அப்படி, எவரிடமும் பிடிபடாமல் திருடித் தின்றால் பேரின்பம் தான். பிடிபட்டுப் போனால், பெறுகின்ற தண்டனை மிகவும் கொடுமையானதாகவும் இருந்தது.

கல்லானாலும், முள்ளானாலும், பாறையானாலும், படு வெய்யிலானாலும், அவர்கள் வெறுங்காலால் தான் நடந்து செல்ல வேண்டும். காலணிகள் எதுவும் அவர்களுக்குக் கிடையாது.

அவர்கள் தூங்குவதற்குக் கட்டாந்தரையே சுகமான மெத்தைகளாக உதவின. நல்ல தரை இல்லையென்றால் புல்லணைகள் அல்லது வைக்கோல் போர்கள் அவர்களை வரவேற்று மெத்தையாக மாறி உதவின.

மாணவர்களாகிய இளைஞர்கள் கடுமையான, மிகவும் கொடுமையான உடற்பயிற்சிகளையே தினம் செய்தனர்.

அறிவு வளர்ச்சிக்கோ, அழகை ரசிக்கும் ரசனைக்கோ அவர்களுக்குக் கற்பித்துத் தரவில்லை அவர்கள் மிகவும் பலம் வாய்ந்த தேகத்தையும், கட்டளைக்குப் பணிந்து போகின்ற கடமை உணர்வுகளை மட்டுமே பெறவேண்டும் என்று அரசு விரும்பி, அவ்வாறே அவர்களை ஆட்டுவித்துப் பயன்பெற்றது.

பாடங்கள்

மாணவர்கள் கற்ற (உடற்கல்வி) பாடங்கள் எல்லாம் அவர்களைப் பெரும் போர் வீரர்களாகவே மாற்றி உருவாக்கின.

மாணவர்கள் கற்ற பாடங்கள் எல்லாம் கடுமையான உடற்பயிற்சிகள். இராணுவப் போர்ப் பயிற்சி முறைகள்.