பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக நாடுகளில் உடற்கல்வி - 181 1936ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு யூனியன் பகுதியிலிருந்தும் ஒவ்வொரு பிரதிநிதியாகத் தேர்ந்தெடுத்து. அமைக்கப்பட்ட தலைமைக் குழுவானது, விளையாட்டு தனித்திறன் போட்டிகள், மற்றும் உடல்துறை கலாசாரம் இவற்றினை வளர்க்கவும், கண்காணிக்கவும் கூடிய பொறுப்பினை ஏற்றுக் கொண்டது. *-* சோவியத் நாட்டின் அமைச்சர்கள் மன்றத்துடன், இந்தக் குழு இணைக்கப்பட்டதன் காரணமாக, உயர் மட்டக்குழு என்ற உயர்ந்த நிலைக்கு ஏற்றம் பெற்றது. இந்த அடிப்படையில் பார்த்தால், அரசாங்க அளவில் விளையாட்டுக்கள் வளர்ச்சிக்குக் குழு அமைத்து, அதனை உயர்மட்ட நிலையில் கொண்டு வந்த பெருமை, சோவியத் யூனியனையே சாரும். அனைத்து யூனியன் உடல்துறை கலாச்சார குழுவின் முக்கியமான பணிகளாவன: 1. சோவியத் யூனியனில் உள்ள பல்வேறு விளையாட்டு அமைப்புக்களை ஒருங்கிணைத்து, ஒட்டு மொத்தமான உடல்துறை கலாச்சார வளர்ச்சியைப் பெருக்குதல்; 2. உடல்துறை கலாச்சாரப் பயிற்சியாளர்களை உருவாக்கி, அவர்களைப் பயிற்றுவிப்பதற்காக தேவைப்படும் இடங்களுக்கு அனுப்பி, தடையில்லாமல் பயிற்சிகள் நடைபெற உதவுதல்; 3. ஸ்டேடியம், சங்கங்கள், நீச்சல் குளங்கள், ஆடுகளங்கள், தரமான விளையாட்டுப் பொருட்களை உருவாக்குதல் போன்ற முக்கியமான செயல்களுக்கு முதன்மை ஸ்தானம் அளித்து செயல்படுதல்; 4. தேசிய அளவில் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு ஏற்ற விதிமுறைகளை உருவாக்குதல்;