பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா விளக்கம் தேவைப்படும்போதும், விவாதம்தோன்றும்போதும் தேவையான தெளிவான அறிவுரைகள் வழங்குதல்; 5. நாடு முழுவதும் உடற்திறன் சோதனைப் போட்டிகள் வைத்து, அவற்றில் தகுதி பெறுபவர்களுக்குத் தேசிய பேட்ஜ் வழங்குதல். * 6. உடல்துறை கலாச்சாரம், விளையாட்டுப் போட்டி களை விளக்கி எழுதுகின்ற பத்திரிகைகளின் தரத்தைக் கண்காணித்து ஊக்குவித்தல்; பள்ளிக் கூடங்களில் உடற்கல்வி அரசு நடத்துகிற பள்ளிகளைத் தவிர, தனியார் பள்ளிகள் என்று சோவியத் யூனியனில் எதுவுமேயில்லை. அதனால், அரசு விடுக்கிற ஆணைகள் அப்படியே அரங்கேற்றம் பெற்றன. ஆரம்பப்பள்ளிகள் முதல் பல்லைக் கழகப் படிப்பு வரை உடல் துறை கலாச்சாரப் படிப்பும் பயிற்சிகளும் பின் தொடர்ந்தன. பள்ளிகள் காலையில் தொடங்கியதும் 10 முதல் 15 நிமிடங்கள் சீருடற்பயிற்சிகளை (Calisthenics) மாணவர்கள் கட்டாயமாக செய்த பிறகே பாடம் தொடங்கியது. அதற்கேற்றவாறு ஒவ்வொரு பள்ளியிலும் விளையாட்டு இடங்கள், விளையாட்டுப் பொருட்கள் வேண்டிய அளவுக்கு இருந்தன. வேண்டிய வசதிகளும் செய்து தரப்பட்டிருந்தன. காலையில் நட்க்கும் சீருடல் பயிற்சிகள் தவிர, வாரத்திற்கு இரண்டு பாடவகுப்புகள் (Periods) ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கும், 3 பாடவகுப்புகள் உயர் நிலைப்பள்ளி மாணவர்களுக்கும் உண்டு. ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு உடற் கல்வி வகுப்புக்களை வகுப்பு ஆசிரியர்களே கற்றுத் தந்தனர், 5ம்