பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக நாடுகளில் உடற்கல்வி 183 வகுப்புக்கு மேற்பட்டு, உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு, சிறப்புப் பயிற்சிப் பெற்ற உடற்கல்வி ஆசிரியர்கள் கற்றுத் தந்தனர். - மாணவர்கள் எல்லோரும், வயது வாரியாகப் பிரிக்கப்பட்டனர். அந்தந்த வயது ஒத்த மாணவர்கள் ஒன்று சேர்ந்து ஓய்வு நேரங்களில் நாடகம், இசை, விளையாட்டுக்கள் போன்றவற்றில் பங்கு பெற்றுப் பழகி மகிழ, வாய்ப்புக்களும் வசதிகளும் செய்து தரப்பட்டிருக்கின்றன. விளையாட்டுக்களில் அதிகத் திறமையும், படிப்பில் சிறந்த மதிப்பெண்களும் பெறுகிற மாணவர்களுக்கு மேலும் - நல்ல வசதியான சூழ் நிலைகளை வழங்கி, சிறப்பு விளையாட்டுப் பள்ளிகள். ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பள்ளிகளில், வழக்கமான பாடம், விளையாட்டு நடந்தாலும், அதற்கும் மேலாக, வாரத்திற்கு 3 பாடப் பிரிவுகள் வைத்துத் தனிப்பயிற்சி தரும் முறையை, அனைத்து யூனியன் கலாசார, விளையாட்டு உயர் மட்டக் குழு ஏற்படுத்தியிருக்கிறது. பல்கலைக் கழகங்களில் உடற்கல்வி பல்கலைக் கழகங்களிலும், நுண் திறன் அறிவியல் கற்பிக்கும் நிறுவனங்களிலும் பயிலுகின்ற மாணவர்களுக்கு உடற்கல்வி கட்டாயமாக்கப் பட்டிருக்கிறது. மாணவர்கள் தங்கள் விருப்பம் போல், விரும்புகிற விளையாட்டுக்களைத் தேர்ந்தெடுத்து பங்கு பெறலாம். விளையாட்டு சங்கங்கள் தொடங்கப்பட்டிருந்தாலும், அவற்றை மாணவர்களே தலைமையேற்று இயக்கிடத் தொடர்ந்து செயல்படுகின்றன. மாணவர்களுக்குக் கற்பிக்கின்ற உடற் கல்வி ஆசிரியர்களுக்குப் பயிற்சியளிக்கும் உயர்தரப் பயிற்சி நிறுவனங்கள் 16க்கு மேல் நாட்டில் உள்ளன. ஒவ்வொரு விளையாட்டிலும் தகுதியும் கற்பிக்கும் திறமையும் பெற,