பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக நாடுகளில் உடற்கல்வி 185 இங்கே ஒருசிறப்பு அம்சத்தை நாம் அறிந்துகொள்வது நல்லது, மாஸ்கோ, லெனின் கிரேடு, கீவ் போன்ற முக்கிய நகரங்களில், மக்கள் காலைப் பயிற்சிகளை செய்வதற்காக வானொலி மூலம் ஒளிபரப்புகின்றார்கள். மக்களும் பயிற்சியைச் செய்கின்றார்கள். ஒவ்வொரு கோடை விடுமுறையின் போதும்; விளையாட்டுப் போட்டிகள்; ஜிம்னேஷியப் பயிற்சிகள் கண்காட்சிகள் எல்லாம் நடத்தப்படுகின்றன. பொதுமக்களும் ஆர்வத்துடன் பங்குபெறுகின்றனர். பார்வையாளர்களும் மகிழ்கின்றனர். நாமும் இதுபோன்ற வழிமுறைகளைப் பின்பற்றுகிறபோதுதான் வரலாறு படைக்க முடியும். «möcJaric /T.3av/Tc " (Spartakiad) . நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை சோவியத் நாட்டில் நடைபெறுகிற மிகமுக்கியமான, பெரிய விளையாட்டுப் போட்டியாகும். o ஒலிம்பிக் பந்தயம் நடைபெறுவதற்கு முன்பாக, ஆரம்பப்போட்டிகள் எல்லாம் கிராமம், நகரம், மண்டலம், யூனியன் போன்ற அமைப்புடன் குடியரசு அளவில் இவைகளுக்கிடையே பல மாதங்கள் தொடர்ந்து நடைபெறும். பல லட்சம் வீரர்களும் வீராங்கனைகளும் இப்போட்டிகளில் கலந்துகொண்டு போட்டியிட, இறுதியாக 10,000 வீரர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அவர் களுக்கிடையே இறுதிப் போட்டிகள் மாஸ்கோவில், உள்ள லெனின் மத்திய விளையாட்டரங்கில் (Union Centre Stadium) BL-ġ55ủLI@ub. இந்த இறுதிப்போட்டிகளில் வென்றவர்களுக்கு ஆழ்ந்த, நுணுக்கம் நிறைந்த பயிற்சிகளை அளித்து, ஒலிம்பிக் பந்தயங்களுக்குச் செல்கின்ற நாட்டின் பிரதிநிதிகளாக