பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக நாடுகளில் உடற்கல்வி 187 இத்தகைய சோதனை விளையாட்டுக்கள், வயதுக் கேற்ப, பால் வேற்றுமைக்கேற்ப மாறுபடுகின்றன. வெற்றி பெறுகிறவர்களுக்குத் தகுந்த மரியாதையும், கெளரவமும் தரப்படுகிறது. சிறந்த வீரர்களுக்கு விளையாட்டுப் பேராளர்கள் என்ற பட்டம் வழங்கப்படுகிறது. 1954ம் ஆண்டில் முதன் முறையாக ஒலிம்பிக் பந்தயங்களில் பங்குபெறத் தொடங்கிய சோவியத் யூனியன், இன்று உலக நாடுகளுக்கிடையே முதல் தர வெற்றி நாடாக விளங்குகிறது. வெற்றிப் பதக்கங்களை வென்று குவிக்கும் ஆற்றல் நிறைந்த நாடாகத் திகழ்கிறது. காரணம் மேலே காட்டப் பெற்ற காரியங்கள் நடைமுறைப் படுத்தப்படுவதால் தான்.