பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக நாடுகளில் உடற்கல்வி 191 அவர்களிலே மும்மூர்த்திகளாகப் பெயர் பெற்றவர்கள் சார்லஸ் பெக், சார்லஸ் போலன்; பிரான்சிஸ் லீபட் இவர்களின் அரிய முயற்சியால் தான்; அமெரிக்காவில் ஜெர்மனி வழி உடற்கல்வியும் பயிற்சிகளும் உச்சக் கட்டத்தில் வளர்ந்தோங்கின. øndigvarð 67. Ješ (Charles Back) இவர் 1823ம் ஆண்டு, ஒரு புதிய ஜிம்னாஸ் டிக்ஸ் பள்ளியை நார்த்தாம்டன் ரவுண்டு ஹில் எனும் இடத்தில் தொடங்கினார். அதுவே, அமெரிக்காவில் தோன்றிய முதல் ஜிம்னேஷியம் என்ற பேரும் புகழையும் பெற்றது. இவர் ஜான் ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சி முறைகளைப் பின்பற்றியதுடன், அவர் எழுதிய ஜெர்மானிய டியூட்ஷி டேன் குண்ஸ்ட் என்னும் நூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டார். அதுவே அமெரிக்காவில் ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சிகள் வேரூன்ற வழிவகுத்தது. øndřovan).:Gounovgör (Charles Follen) அமெரிக்காவில் உள்ள ஹார்வார்டு பல்கலைக் கழகத்தில் இவர் ஜெர்மன் மொழி கற்பிக்கும் ஆசிரியராகப் பொறுப்பேற்றிருந்தார். இவருக்கு ஜிம்னாஸ் டிக்ஸ் பயிற்சிகளில் இருந்த ஆர்வத்தின் காரணமாக, இவர் மேற்கொண்ட முயற்சிகளால், ஹார்வார்டு பல்கலைக் கழகத்தில் ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சிக்கான ஜிம்னேஷியம் ஒன்று நிறுவப்பட்டது. அந்த ஜிம்னேஷியத்திற்கு இவர் கண்காணிப்பாளராக அமர்த்தப்பட்டார். ஓட்டம், தாண்டல், ஊஞ்சல் பயிற்சிகள், கம்பப் பயிற்சிகள் எல்லாம் கற்றுத்தரும் களமாக இது இருந்ததால், மாணவர்கள் மட்டுமன்றி வழக்கறிஞர்கள், வணிகர்கள் என்று பல்வேறு துறையினரும் வந்து