பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா பங்கேற்றனர். பயிற்சிகள் செய்தனர். அத்துடன், வயது வரம்புக்கேற்ப, பயிற்சிகள் வகுக்கப்பட்டு அளிக்கப்பட்டன. இவரது பயிற்சிகள் ஜெர்மன் முறையிலேதான் அமைந்திருந்தன. c%α/τςότςm) 65J/i (Francis Liber) பாஸ்டனில் தொடங்கிய ஜிம்னேஷியத்தில்; போலன் நீங்கிய பிறகு, அவரிடத்தில் பயிற்சி தரும் பொறுப்பாளராகச் சேர்ந்தார். இவர் அங்கே நீச்சல் குளம் ஒன்றை அமைத்து, புதிய வசதியைச் செய்து தந்ததால், அதிகமாக அங்கத்தினர்கள் வந்து சேர்ந்தார்கள். இப்படியாக இந்த மும்மூர்த்திகள் அளித்த பயிற்சிகளும், அதிக எண்ணிக்கையில் மக்கள் ஜெர்மனியிலிருந்து வந்து அமெரிக்காவில் தங்க ஆரம்பித்ததாலும், ஜெர்மன் ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சிகள் அமெரிக்காவில் முக்கியமான இடத்தைப் பிடித்துக்கொண்டன. ஏறத்தாழ 50 ஆண்டுகள் (1850-1900) அமெரிக்காவில் உடற்கல்வியைப் பரப்பி உண்மையான தொண்டாற்றிய காரணத்தால் ஜெர்மனி வழி உடற்கல்விமுறை, இனிய இடத்தைப் பெற்றது. எப்விடன்முறை உடற்கல்வி ஸ்வீடன் பயிற்சிமுறைகள் அமெரிக்காவில் காலூன்றக் காரணமாக இருந்தவர் திருமதி மேரி ஹேமன்வே. (Mrs. Mary Hamenway). இவர் ஒரு சமயம் ஸ்வீடன் நாட்டு’ இளைஞர் ஒருவர் ஸ்வீடன் நாட்டு ஜிம்னாஸ் டிக்ஸ் பயிற்சிகளை செய்து கொண்டிருப்பதைப் பார்த்துப் பெரிதும் வியப்படைந்தார். அதை பாஸ்டன் நகரிலுள்ள பள்ளி களெங்கும் பயன்படுத்தினால், சிறுவர்களும் சிறுமிகளும் சிறந்த பயனடைவார்கள் என்று அவர் நம்பினார்.