பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2OO டாக்டர். எஸ். நவராஜ செல்லையா அதற்காக தனது சொந்த ஜிம்னேஷியம் ஒன்றையும் நிறுவி சேவைகள் புரிந்தார். உடற் கல்வி தனிப்பட்ட மனிதனது தேகத்தை செழித்தோங்கவும், அமைப்பில் சிறப்பாக விளங்கவும் உதவ வேண்டும். உதவும் என்றார். அதற்காக, முதுகு, மார்பு, கால்கள், கைகள், மணிக் கட்டுப் பகுதிகள், விரல்கள் போன்றவற்றினை பலமுடன் வளர்க்கும் பயிற்சிகளையும் டட்லி உருவாக்கித் தந்தார். 6. googn) q 2 cl (Thomal D. Wood) தாமஸ் உட் ஒரு சிறந்த உடற் கல்வியாளராகத் திகழ்ந்தவர். தனது சொற்பொழிவாலும், சிறந்த கட்டுரைகளாலும் உடற்கல்வியின் ஒப்பற்ற வளர்ச்சிக்கு உன்னதசேவை புரிந்தவர். இவர் தனது கொள்கையை இவ்விதமாக விளக்கி எழுதியிருக்கிறார். உடற்கல்வித் திட்டம் ஒன்றை வழங்கும்போது, அது உள வளர்ச்சிக்கு மட்டுமின்றி, உறுப்புக்களின் இயக்க வளர்ச்சிக்கும் வழி வகுப்பதுடன், கல்வி முறையாலும் கவரப்பட வேண்டும். மற்றவர்களால் ஒப்புக்கொள்ளப் படவேண்டும். அத்துடன். அந்தத் திட்டம் பொதுக் கல்வியுடன் முழு அளவில் ஒத்துப்போகின்ற திட்டமாக்வும் மற்ற அறிவியல் பாடங்களுடன் அனுசரித்துப் போவது போலவும் அமைந்திட வேண்டும். உடலுக்கு வெறும் பயிற்சிகளை அளிக்கின்ற உடற்கல்வி முறையை இவர் அறவே வெறுத்தார். உடற் பயிற்சிகள் உடல் நலத்தையும், அதே நேரத்தில் உடல் வளர்ச்சியையும் ஊட்டுகின்ற தன்மையில் அமைத்தல் நல்லது என்று உணர்த்தினார். இவர் 1910ம் ஆண்டு, நலமும் கல்வியும் எனும் நூல் ஒன்றை எழுதி வெளியிட்டார். உடற்கல்வி மற்றும் பல