பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக நாடுகளில் உடற்கல்வி 2O3 இயக்குநராகப் பொறுப்பேற்றுக் கொண்டு, ஆரம்பப் பள்ளிகளில் மாணவர்களுடைய சாதனையை அளந்தறியும் G&mg,60601 (peopsoul (Achievements Tests) offlopää படுத்தினார். அத்துடன், நியூயார்க் நகரத்திலே, ஆடுகளங்கள் அதிகமாக அமைக்கப்பட வேண்டும் என்ற முயற்சியில், ஆடுகள இயக்கம் ஒன்றையும் டாக்டர் ஹென்றி கர்டிஸ் (Dr. Henry Gurtis) என்பவர் துணையுடன் வெற்றிகரமாக செயல்படுத்தினார். 1906ம் ஆண்டு முதல் இந்த இயக்கம் சிறப்பான சாதனைகளைச் செய்து முடித்தது. கல்லிக்கின் கொள்கையாவது; உடற் கல்வியின் உடற்பயிற்சிகளும், பொழுதுபோக்கு விளையாட்டுக்களும் பொதுமக்களிடம் போய் சேரவேண்டும். உடற்பயிற்சிகள் கடினமான தன்மையில் அமையாமல், அவரவர் செய்யும் தொழிலிலிருந்து மாறி வந்து மகிழ்ச்சிபெறவும், சந்தோஷ மடையவும், பொது மக்களிடையே ஒரு சுமுகமான உறவு அமையவும் உதவ வேண்டும். மாணவர் சாரண இயக்கத்தின் தலைவராகவும் பெண்கள் சாரண இயக்கத்தின் தலைவராகவும் இவர் தனது சேவையைத் தொடர்ந்து, அமெரிக்க மக்களுக்கு அளித்து வந்தார். J.H. 67aoéšødą (J.H. Macurdy) இவரது காலம் 1866-1940, லூதர் கல்லிக் அவர் களுக்குப் பிறகு, ஸ்பிரிங் பீல்டு உடற்கல்வித் துறையின் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டு, ஒய்.எம்.சி.ஏயின் உடற் கல்விப் பணியில் பெருமிதம் ஏற்படும் வகையில் இவர் தனது பணியைத் தொடர்ந்தார்.