பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக நாடுகளில் உடற்கல்வி 2O5 அலுவலர் (Madam) ஒருவரையும் பணி அமர்த்தி, குழந்தைகள் பாதுகாப்புடன் விளையாடி மகிழ உதவினார்கள். நாடெங்கும் இவ்வாறு ஆடுகளங்கள் குழந்தைகளுக்கு மட்டுமன்றி, இளைஞர்களுக்கும், பெரியவர்களுக்கும் பெண்களுக்கும் பயன்படுகின்ற அளவில் அமைக்கப்பட்ட போது, அவற்றை செம்மைப்படுத்த அமெரிக்க ஆடுகளக் &päth (Play ground Association of America) 6T6ürm) &6örs) 1905ம் ஆண்டு அமைக்கப்பட்டது, அதன் தலைவராக டாக்டர் கல்லிக் பொறுப்பேற்றுக் கொண்டார். இவ்வாறு ஆடுகளம் அமைக்கின்ற பொறுப்புடன், வசதி படைத்த செல்வந்தர்கள், விளையாட்டு விரும்பிகள், பொருள் தந்து உதவினார்கள். அரசும் பொது நிதியிலிருந்து பெருந்தொகை ஒதுக்கி உதவியது. இந்த அமெரிக்க ஆடுகள இயக்கம், 5 ஆண்டுகள் கழித்து அமெரிக்க ஆடுகள, பொழுது போக்கு இயக்கம் என்று மாறியது. மேலும் அதன் அமைப்பில் செயலில் முன்னேற்ற மடையவே, அதன் பெயரும் தேசிய பொழுதுபோக்குக் கழகம் (National Recreation Association) 6Tsirugsts, losslé கொண்டது. அமெரிக்காவில் உடற்கல்வி வளர்ச்சி பொது மக்களிடையே, பள்ளிக் க ரி மாணவ மாணவியரிடையே உடற்கல்வி உன்னத வளர்ச்சியை யும் எழுச்சியையும் பெற, பல பொது நிறுவனங்கள், கழகங்கள் சிறந்த சேவை புரிந்தன. அவைகளில் முக்கியமான சில கழகங்களை இங்கே காண்போம்.