பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக நாடுகளில் உடற்கல்வி 2O9 மல்யுத்தம், நீச்சல், உடற்பயிற்சி, வேட்டையாடுதல் போன்ற முயற்சிகளைத் தங்கள் வலிமை போற்றும் பயிற்சிகளாக அறிந்து மேற்கொண்டனர். ஆனால், பொதுமக்களோ போதுமான அளவுக்கு பலமிருந்தால் போதும் எண்ணியதாலோ என்னவோ என்று அவர்கள் நீச்சல், மல்யுத்தம் என்றவற்றில் மட்டுமே பங்கு கொண்டு மகிழ்ந்தனர். போர் முறைப் பயிற்சிகளில் மக்கள் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த காலம் ஒன்று ஏற்பட்டபோது. எங்கும் கத்திச் சண்டைக்கான பள்ளிகள் தோற்றுவிக்கப்பட்டன. கற்றுத் தருகின்ற ஆசான்களும் எண்ணிக்கையில் அதிகமாயினர். என்றாலும், அவரவர்கள் விரும்புகிற பாணியில் (Method) அவரவர்கள் கற்றுத்தரத்தொடங்கிய ஒரு காலமாக, பழைய ஜப்பானின் உடற்கல்வித்துறை இருந்தது. கலை, இலக்கியம் மற்றும் ஜப்பான் கலாச்சாரத்தில் சீனாவின் ஆதிக்கம் அதிகமானபோது, ஜூடோ என்றதற்காப்பு முறைப்பயிற்சி அதிகமான முன்னேற்றம் பெற்றது. அதற்குக் காரணம் சீனாவிலிருந்து வந்த ஜியூஜிட்சூ (Jiu Jitsu) எனும் தற்காப்புக் கலையின் உள்ளாதிக்கமே, ஜூடோவின் வளர்ச்சிக்குக் காரணமாய் அமைந்தது. மல்யுத்தமும் நாட்டில் மிகுதியான வரவேற்பைப் பெற்றிருந்தது. சிறு வயது முதலே மல்யுத்தத்தில் பயிற்சி பெற்றுவந்த மல்யுத்த வீரர்கள், வணிகமுறை வீரர்களாக மாறி வந்திருக்கிறார்கள் என்ற வரலாற்றுக் குறிப்பையும் நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது. புதிய ஜப்பான் (Modern Japan) புதிய ஜப்பானின் கல்விமுறைகளையும், நாம் இரண்டு பகுதியாகப் பிரித்துக் காணலாம்.